Breaking News

சமூக செயற்பாட்டாளர் ஆளூர் அமீர் அல்தாஃப் அவர்களுக்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு!

நிர்வாகி
0

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் நிர்வாகி, அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் நூலின் தொகுப்பாசிரியர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஆளூர் அமீர் அல்தாஃப் அவர்களுக்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு அய்மான் சங்கத் தலைவர் ஹாஜி ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில் 28-01-2020 செவ்வாய் மாலை துணைத் தலைவர் முஹம்மது ஜமாலுத்தீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. துவக்கமாக பொருளாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி கிராஅத் ஓதினார்.

கோவை மாநகரில் பன்முகத் தொண்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆளூர் அமீர் அல்தாஃப் அவர்களைப் பற்றிய அறிமுகத்தை அய்மான் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி வழங்கினார்.

ஆளூர்.அமீர் அல்தாஃப் தான் உருவாக்கிய அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் நூலின் நான்கு பாகங்களின் ஆக்கத்தை விரிவாக எடுத்துறைத்ததோடு,அய்மான் சங்கத்தின் பத்தாவது ஆண்டு மலரை ஆளூர் ஜலால் அவர்களுடன் இணைந்து தானும் உருவாக்கியதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு,பல்வேறு வரலாற்று சம்பவங்களை நினைவூட்டி ஏற்புரை நிகழ்த்தினார்.

அரபுலகின் முன்னணி தொலைக்காட்சியான அல்ஜஸீரா தொலைக்காட்சி சார்பில் உலகின் தலைசிறந்த திருக்குர்ஆன் ஆராய்ச்சியாளர்கள் 100 பேரில் ஒரே இந்தியராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆசிரியரியன் அடுத்த படைப்பு ஆயிரம் பக்கங்களுடன் தயாராகிக் கொண்டிருக்கும் வேத விஞ்ஞானம் நூல் விரைவில் வெளிவர உள்ளது.

கோவையில் ஜீவஜோதி தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இறந்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்து வரும் சிறந்த சமூக செயற்பாட்டாளரான ஆளூர் அமீர் அல்தாஃப் அவர்களுக்கு அய்மான் சங்கத் தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். துணைப் பொதுச்செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் எழுதிய ‘’விடியலைத்தேடி மற்றும் இஸ்லாத்தின் பார்வையில் காதல்’’ ஆகிய நூல்கள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள் கீழக்கரை முஹம்மது ஜமாலுத்தீன், லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி,பூந்தை ஹாஜா மைதீன்,லால்பேட்டை அப்பாஸ் மிஸ்பாஹி,ஆடுதுறை அப்துல்காதர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன்,மன்னார்குடி பிர்தோஸ் பாஷா,பசுபதிகோவில் சாதிக் பாட்சா,காயல் லெப்பை தம்பி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Tags: உலக செய்திகள்

Share this