Breaking News

லால்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து 1 கோடி கையெழுத்து இயக்கம் துவக்கம்

நிர்வாகி
0
லால்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து 1 கோடி கையெழுத்து இயக்கத்தை 03/02/2020 அன்று தி.மு.க மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார் . தி.மு.க நகர செயலாளர் ஹாஜா மைதீன் வரவேற்று பேசினார்,

லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜெ. அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார்,மமக மாவட்ட செயலாளர் அப்துல் சமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மெளலானா தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான், மமக மாநில செயலாளர் மெளலானா முஹம்மது அன்சாரி, தேசிய லீக் மாவட்ட தலைவர் ரியாஜுல்லா, காங்கிரஸ் மாவட்ட துணைச் செயலாளர் நஜீர் அஹமது ஆகியோர் கையழுத்து இயக்கத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.நிகழ்ச்சியில் இ.யூ. முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ. அமானுல்லா, மாநில சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.ஆர். அப்துல் ரஷீது, லால்பேட்டை நகர தலைவர் எம்.ஓ. அப்துல் அலி, நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப், பொருளாளர் ஏ.எம்.ஜாபர், ஜமாஅத்துல் உலமா சபை நகர செயலாளர் மெளலவி சலாஹ்த்தீன், தி.மு.க ஒன்றிய செயலாளர் சோழன் ,தேசிய லீக் மாவட்ட செயலாளர் நவ்வர் ஹுஸைன் , நிர்வாகி அப்துல் சமது , மன்சூர்,மமக நகர செயலாளர் நூருல் அலீம் , நகர பொருளாளர் ஷபீகுர் ரஹ்மான், ஹாஜா , ஹனீபா , ஹாரிஸ் எஸ்டிபிஐ நிர்வாகிகள் ஜைனுத்தீன் , நஜ்புத்தீன், மஜக மாவட்ட செயலாளர் ஜாக்கிர் ,மஜக துணைச் செயலாளர் கியாசுத்தீன் மற்றும் ஏ.எம்.அய்யூப் ,எஸ்.ஏ. அப்துல் அஹது, பத்தஹ்த்தின், அனிசுர் ரஹ்மான் ,அன்வர், ஜாபர் அலி, பையாஜ் , பைசல் ,ஏ. இனாமுல் ஹக், ஏ.எஸ்.அஹமது ,கே.யூ. சைபுல்லா, முபாரக் , ஹலிக்கு ஜமான், உபைதுர் ரஹ்மான் , சாதுல்லா , பத்தஹுத்தீன் , முஸாஹிர், மற்றும் பள்ளிவாசல் முத்தவல்லிகள் , ஜமாஅத் பிரமுகர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்று கையெழுத்திட்டனர் . நகர தி.மு.க இளைஞரணி செயலாளர் ரியாஜ் நன்றி கூறினார்.

Tags: லால்பேட்டை

Share this