லால்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீக் செயற்குழு ஆலோசனைக் கூட்டம்.
லால்பேட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் 14/02/2020 அன்று நகர பிரமுகர் எம்.ஹெச்.முஹம்மது நாசர் இல்லத்தில் மிகுந்த எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடைப்பெற்றது.
கூட்டத்திற்க்கு இ.யூ. முஸ்லிம் லீக் கடலூர் மாவட்ட முன்னாள் தலைவர் ஹாஜி எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மெளலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,கோஸி ஹாஜி கே.எஸ்.அபுல் ஹஸன்,நகர முஸ்லிம் லீக் மூத்த தலைவர் எம்.ஏ. அப்துல் ஜெலில்,லால்பேட்டை நகர இளைஞரணி முன்னாள் தலைவர் ஹாஜி கே.எஸ்.சபியுல்லா,ஹாஜி எஸ்.எம். ஹாமிது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மெளலனா முஹம்மது அன்வர் ஹஜ்ரத் கிராஅத் ஓதினார். நகர செயலாளர் முஹம்மது ஆசிப் வரவேற்றுப் பேசினார்.
இ.யூ. முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கவிஞர். ஏ.எம்.முஹிப்புல்லா,மெளலவி எஸ்.ஏ.சையது அஹமது மிஸ்பாஹி,ஹாஜி ஏ.எம்.தைய்யூப் முஹிப்பி,ஹாஜி எஸ்.எம்.வாஜிது,டி.ஏ. அபுஸுது ஆகியோர் இயக்க வளர்ச்சிகள் பற்றி கருத்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில் ஹாஜி ஏ.உபைதுர் ரஹ்மான், எம்.அமானுல்லா,எம்.ஏ. தாஜுத்தின்,எம்.உ ஜைர் அஹமது ,எம்.ஏ. ஹஜ்ஜி முஹம்மது,ஏ.ஆர். சிராஜூத்தீன்,டி.கலீமுல்லா,எஸ்.ஏ.அபு சுஹுத்முஹம்மது ஹாமிம் ,ஜபருல்லா, மெளலவி மஹபூப் அலி ரப்பானி,மௌலவி பைசல், மெளலவி ரஹமத்துல்லா, ஹிதாயத்துல்லா, உபைதுல்லா,அன்சாரி, ஹூஸைன்,நபீல்,நஜிபுல்லா,பஜிலுர் ரஹ்மான்,பஜ்லுத்தீன்,அப்துல் அஜீஸ்,அய்யூப் சாதுல்லா,கே.எஸ்.ஆஷிக் அஹமது,ஹஸன், மாணவரணி நிர்வாகிகள் அஸ்கர்,அனீஸ்,முஸாஹிர்,அஸார்,ஆத்திப் மற்றும் மாணவர் அணி , இளைஞர் அணி நிர்வாகிகள்,இயக்க பிரமுகர்கள் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி பொருளாளர் முபாரக் முஹம்மது நன்றி கூறினார். சவூதி காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் லால்பேட்டை எஸ்.எம்.முஹம்மது நாசர் அவர்களின் வாழ்த்து செய்தியை முபாரக் பதிவு செய்தார்.ஏ.எஸ். அஹமது தீர்மானம் வாசித்தார். தீர்மானங்கள்
இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் ருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் கோரிக்கை ஏற்று குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வலுயுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இ.யூ. முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபூபக்கர் எம்.எல்.ஏ அவர்கள் தமிழக சட்டமன்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தில் லால்பேட்டையில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று லால்பேட்டையில் அரசு மருத்துவமனை அமைத்திட தமிழக அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மெளலவி முஹம்மது அன்வர் ஹஜ்ரத் அவர்கள் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
Tags: லால்பேட்டை