லால்பேட்டை வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம்
நிர்வாகி
0
லால்பேட்டை வங்கியில் உள்ள பணத்தை திரும்ப பெற இஸ்லாமிய பெண்கள் ஒரே நேரத்தில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் அவர்கள் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறுகின்றது. கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்குடி லால்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அனைவரும் வங்கி முன்பு குவிந்தனர்.
லால்பேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஒரே நேரத்தில் குவிந்து பணத்தை திரும்பப் பெற வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் வங்கி பணி முடங்கியுள்ளது. அனைத்து பெண்களும் எங்களுடைய பணத்தை திரும்பி பெற வேண்டும் அல்லது என்றால் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கமிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பல வங்கிகள் திவால் ஆகி வருகிறது , அதுமட்டுமில்லாமல் பொருளாதாரம் சரிந்து இருக்கிறது எனவே தங்களுடைய பணத்திற்கு பாதுகாப்பு இல்லை , எங்களுக்கும் நம்பிக்கையில்லை என்ற கோரிக்கையையையும் பொதுமக்கள் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: லால்பேட்டை