Breaking News

இ.யூ. முஸ்லிம் லீகிற்கு டெல்லியில் ‘காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி’எனும் பெயரில் கட்டிடம் உருவாக்க திட்டம்

நிர்வாகி
0
கல்வி, சமூக, நலத்திட்டம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு இ.யூ. முஸ்லிம் லீகிற்கு டெல்லியில் ‘காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி’எனும் பெயரில் கட்டிடம் உருவாக்க திட்டம் டெல்லி கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்குநிவாரண நிதியை தாராளமாக வழங்க வேண்டும் டெல்லியில் நடைபெற்ற நிவாரண பணிக்குழு கூட்டத்தில் வேண்டுகோள் புதுடெல்லி, மார்ச். 05-

கல்வி, சமூக, நலத்திட்டம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு டெல்லியில் ‘காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி’ பெயரில் கட்டிடம் உருவாக்க முடிவு செய் திருப்பதாகவும்,

டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரண நிதியை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் டெல்லியில் நடைபெற்ற நிவாரண பணிக்குழு கூட்ட த்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமைக்கப் பட்ட டெல்லி கலவர நிவாரணக்குழுக் கூட்டம் புதுடெல்லி பாபர் சாலை எமரால்டு ஹோட்டல் ஹாலில் வியாழக்கிழமை 05-02-2020 காலை 9 மணி முதல் 10. 30 மணி வரை நடந்தது. குழுத்தலைவர் குர்ரம் அனீஸ் உமர் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி எம்.பி., இ.டி. முகம்மது பஷீர் எம்.பி., பி. வி. அப்துல் வகாப் எம்.பி., கேரள பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிவாரணக்குழு உறுப் பினர்கள் பெங்களூரு எம்.கே. நௌஷாத், தமிழ்நாடு அபூபக்கர் சம்சுதீன், டெல்லி பிரதேச தலைவர் மௌலானா நிஸார் அகமது, பொதுச்செயலாளர் ஷேக் பைஸல், டெல்லி முகமது ஹலீம், யூத் லீக் தலைவர் கொல்கத்தா சாபிர் கப்பார், அதன் பொதுச்செயலாளர் சி.கே. ஜூபைர்,(கேரளா), அஹமது ஷாஜூ (எம்.எஸ்.எஃப்) மற்றும் சிறப்பு அழைப்பாளராக எம்.எஸ்.எஃப் முஹம்மது அர்ஷத், மராட்டிய அப்துல் கபூர், கேரள சிராஜ்தீன் நத்வி, டெல்லி நூர் ஷம்சு, காலிக் ரஹ்மான், கேரள ஜஹீத்பிபி, வழக்கறிஞர் பைஸல் பாபு, ஷிபுமீரான், பிவிகுன்ஹு அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

டெல்லி கலவர நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருவது குறித்த பரிசீல னையில் கூட்டம் ஈடுபட்டு இன்றைய நிலை குறித்து விவரமாக விவாதித்தது. டெல்லி மைனாரிடி கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள விவரங்கள் மிகுந்த அதிர்ச்சி தருவதாக உள்ளதாகக் கூட்டம் கருதியது. டெல்லி கலவரம் ஓரவஞ் சனையானது, முன்திட்ட மிடப்பட்டு அரங்கேற்றம் செய்யப் பட்டுள்ளது. முஸ்லிம் குடி யிருப்புகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கப் பட்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறியுள்ளதை டெல்லி பிரதேச அரசும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு பாதிக்கப் பட்டுள்ள வர்களுக்கு உரியதும், போதியதும், நீதியானது மான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது.

டெல்லி கலவர நிவாரணக்குழு சார்பில் இதுவரை உயிர்பலி நடந்துள்ள குடும்பங்களுக்கு பன்னிரண்டு லட்சம் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. மற்றுள்ள 35 குடும்பங்களுக்கு அவர்களின் முழு விவரம் சேகரித்து ஒரு லட்சம் வீதம் விரைவில் கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கலவரத்தில் 422 பேர் பலவித காயங்கள் பட்டுள்ளனர். 122 வீடுகள், 322 கடைகள், 301 வாகனங்கள், 12 பள்ளிவாசல்கள், ஒரு தர்கா, ஒரு கோயில் சேதம் அடைந்துள்ளன. இவர்களுக்கு குடும்பவாரியாக பெங்களூரூ கே.எம்.சி.சி. சார்பில் ஒன்பது இலட்சம் நிவாரணம் அளிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அவசர நிவாரணம் கொடுக்கும் பணியை இக்குழு விரைவுபடுத்திட முடிவு செய்தது.

சேதமடைந்த பள்ளி வாசல்களை புரனமைப்பு செய்யும் பணிக்கு சமுதாய புரவலர்களை அணுகுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சி.ஏ.ஏ.,என்.ஆர்.சி., என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டு துப்பாக்கி சூட்டில் பலியான உ.பி. மாநில 23 பேர், அஸ்ஸாம் 5 பேர், மங்களூர் 2 பேர் ஆகியவர்களுக்கும் நிவாரணம் அளிக்க முடிவு செய்யப்பட்டு இதுவரை மங்களூரு வாசிகள் இருவருக்கு ரூ. 5 லட்சம் வீதம் பத்து இலட்சம் வழங்கப்பட்டது. மீரட்டில் 4-03-2020-ல் கான்பூர் குடும்பங்கள் மூன்றுக்கும், பிஜ்னூர் குடும்பங்கள் இரண்டுக்கும், மீரட் குடும்பங்கள் நான்கிற்கும் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கும் விரைவில் நிவாரண நிதி தருவதற்கு முடிவு செய்யப்பட்டது.

டெல்லி கலவரம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு முதலில் ஈடுபட்டுள்ள அரசியல் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்பதை தெரிவிப்பதில் குழுக்கூட்டம் பெருமிதம் கொண்டது.

இதுவரை கேரளாவில் வசூலிக்கப் பட்டுள்ள தொகையில் இருந்தும், பெங்களூரு கே.எம்.சி.சி. மூலம் வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்தும் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது. தனிப்பட்டோரும், பிற சமூக இயக்கங்களும் வசூலிக்கும் தொகைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் டெல்லி கலவர நிவாரணப் பணிக்குழு மூலமாக விநியோகிப்பதற்கு முன்வர வேண்டுகோள் விடப்பட்டது. காரணம், நிவாரணக்குழுவில் பதினோரு பேர் ஈடுபட்டு ள்ளனர். பல தொண்டர் களுடன் பாதிக்கப்பட்டுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இருபத்தாறு பகுதிகளிலும் நுழைந்து புள்ளிவிவரங்கள் சேகரித்து, அதனடிப் படையில் நிவாரணம் முறையாக வழங்கப் படுகிறது. இதனை அறியும் எல்லோரும் நிவாரண நிதியை தாராளமாக வழங்குமாறும், இதனை எல்லா மாநிலங்களிலும் விரிவுபடுத்துமாறும் கூட்டம் வேண்டுகோள் விடுத்தது.

இந்தியத் தலைநகர் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளுடன் கல்வி, சமூக நலத்திட்டம், அசாதாரண சூழ்நிலைகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து செல்வதற்கு டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஓர் அலுவலகம் உருவாவது இன்றைய காலத்தின் கட்டாய மாகியிருப்பதை உணர்ந்த இந்தக்குழு டெல்லி பட்டணத்தின் பிரதானமான இடத்தில் "காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி" என்னும் பெயர் தாங்கிய கட்டடம் உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது.

இந்த கட்டடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம், சார்பு அமைப்புகள் அனைத் துக்குரிய அலுவலகங்கள் மற்றும் சகல வசதிகளுடன் கூடியதாக அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.

நிவாரணப்பணிக்குழு மீண்டும் மார்ச் 12-ம் தேதி வியாழக்கிழமை புதுடெல் லியில் கூடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: சமுதாய செய்திகள்

Share this