Breaking News

தடை செய்யப்பட்ட ஹஜ்ஜின் கிரியைகளின் முக்கிய ஆண்டுகள்

நிர்வாகி
0

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுக்க இருப்பதால், அது மற்ற மக்களுக்குப் பரவாமல் இருக்க, இந்த ஆண்டில் உம்ரா கிரியைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த முடிவு புதிதாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல`` சில அரசியல் காரணங்கள்,இயற்கை பேரிடர், நோய்கள் பரவுதல் மக்களின் ஆடம்பர ஆசையில் பொருளாதாரம் சரிவு நிலை, திருடர்கள் பயம்,மக்காவிற்குச் செல்ல பாதைகள் துண்டிப்பு`‌ இப்படியாக, ஹஜ் கிரியைகள்  நாற்பது முறைக்கும் மேல் தடை செய்யப்பட்டப்  பட்டியலை வரலாற்று ஆசிரியர்கள் தருகிறார்கள்.

கொரோனா நோயின் தாக்கம் மிக விரைவில் சீராகி, இந்த வருட  ஹஜ் கிரியைகள் துவக்கப்படுமென்ற நம்பிக்கை வைப்போம்`  இன்ஷாஅல்லாஹ்.

கி.பி 865 ஆம் ஆண்டு அரஃபாத் பெருவெளியில் நடந்த படுகொலை.

இஸ்மாயில் பின் யூசுஃப் அல்அலவி என்பவரும் அவரின் ஆதரவாளர்களும் சேர்த்து ஒட்டுமொத்த ஹாஜிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை கொன்று குவித்தனர். அரஃபாத் பெருவெளியில் நடந்த இந்த படுகொலை காரணமாக ஹிஜ்ரி 251 ஆண்டில்  ஹஜ் கிரியைகள்  நிறைவேற்ற  அனுமதிக்கவில்லை.

கி.பி 930-ல் கராமித்தா என்ற கூட்டத்தார்கள் ஹஜருல் அஸ்வதை திருடியது...

 ஹஜ் செய்வது சிலை வணகிகளின் அடையாளமென்று கருதி மஸ்ஜிதே ஹரம்மில் ஹிஜ்ரி 317-ல் ஆண்டு கராமித்தா கூட்டத்தார்கள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். பல ஹாஜிகளைப் படுகொலை செய்தார்கள். 22 வருடம் ஹஜருல் அஸ்வதை திருடி மறைத்து வைத்திருந்தார்கள்.பின்பு ஹிஜிரி‌ 339 ஆண்டு மறுபடியும் அதே இடத்தில் வவைக்கப்பட்டது ..

அதே போல், ஹிஜிரி‌ 317 – ல் தர்வியா நாளன்று பஹ்ரைன் மன்னனாகவும் மற்றும் கராமித்தாக்ளின்  கூட்டத்தின் தலைவராக இருந்த, அபு தாஹிர், மக்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேறும் நேரத்தில்,  ஹஜருல் அஸ்வதை பெயர்த்து எடுத்து (தற்போது கத்திப் என்று அறியப்படும்) ஹஜர் என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தான். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹாஜிகளைக் கொன்று குவித்தான். இந்தப் படுகொலையை செய்தப் பின், “நான் அல்லாஹ்வைக் கொண்டு இருக்கிறேன்”.இன்னும் “அல்லாஹ்வைக் கொண்டு நான் இருக்கிறேன்”.”அவன் படைப்பைப் படைக்கின்றான்.நான் அவர்களை அழிக்கின்றேன். என்று கர்வத்தை வெளிப்படுத்தினான். மக்காமே இப்ராஹீமை திருட முயன்றான். அதனை, அங்குள்ள ஊழியர்கள் மறைத்து வைத்து விட்டார்கள்.

ஹிஜ்ரி 318ஆம் ஆண்டில் (கதீஃப் பகுதியில்) ஒரு பெரிய வீட்டில் ஹஜருல் அஸ்வதை வைத்த பிறகு கதீஃப்பில் உள்ள “ஜிஷ்” என்ற பகுதியில்தான் ஹஜ் செய்யவேண்டுமென்ற நடைமுறையை கராமித்தாக்கள் கொண்டுவந்தனர். அந்த குறிப்பிட்ட பகுதிக்கு ஹஜ் யாத்திரை செல்ல, கதீஃப் பகுதியில் வசிப்பவர்கள் கராமித்தாக்களால் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்`. அந்த கட்டளையை ஏற்க அப்பகுதி மக்கள் மறுத்ததின் காரணமாக அவர்களின் பலரை (இந்த கராமித்தாக்கள்) கொன்றனர்.

கி.பி. 983.- ல் பனி அப்பாஸ் மற்றும் பனி உபைதா காலங்களில்..

  ஹிஜிரி 372 முதல் ஹிஜிரி 380 வரை பனி அப்பாஸியாக்களுக்கும், மிஸ்ரை சார்ந்த பனி உபைதாவிற்கும் மத்தியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், இராக் வாசிகளுக்கு ஹஜ் செய்யத் தடை செய்யப்பட்டது.

கி.பி 1037-ல் எகிப்து வாசிகள்

ஹிஜிரி 428-ல் இராக் வாசிகள் எவருக்கும் ஹஜ் செய்ய அனுமதிக்கவில்லை . எகிப்திய மற்றும் அதன் சுற்றியுள்ள மக்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டார்கள்.

 கி.பி 1253-ல் பத்து ஆண்டுகள் கழித்து பாக்தாத் நகரத்தை சார்ந்தவர்கள் திரும்பினார்கள்..

  கலிஃபா முஸ்தன்சர் மரணத்திற்குப் பிறகு  பக்குதாதியைச் சார்ந்தவர்கள், ஹிஜ்ரி 650-ல் ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டார்கள்.

கி.பி1257-ல் 

ஹிஜ்ஜாஜ் மாகாணத்தை ஹஜ் சார்ந்தவர்கள் செய்யவில்லை..

  ஹிஜ்ரி 655-ல் ஹிஜ்ஜாஜ் மாகனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற . அனுமதிக்கவில்லை. எந்தவொரு அரசர்களின் கொடிகளும்‌ அங்கே ஏற்றப்படவில்லை.‌

கி.பி 1814 ஆம் ஆண்டு கொள்ளை‌ நோய்.

கொள்ளை நோயால் 8 ஆயிரம் மக்கள் ஹிஜாஜ் மாகானத்தில் உயிர் இழந்தனர். அப்போதும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.

கி`பி 1831-ல் இந்தியாவின் தொற்று நோய்  பல ஹாஜிகளைக் கொன்றது

 இந்தியாவில் உருவான நோயின்‌ காரணமாக ஹிஜிரி‌ 1831-ல் ஹஜ்  காலத்தில் முக்கால்வாசி ஹாஜிகள் மரணமடைந்த காரணத்தால் ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

கி.பி 1837-ல் தொற்று நோய் ..

 கி.பி 1837-ல் ஹஜ் காலத்தில் ஒரு வித தொற்றுநோய் பரவியதால் கி.பி 1840 வரை ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

கி.பி 1846 - ல் காலரா நோய்..

  ஹிஜ்ஜாஜ் மாகாணங்களில் காலரா நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டன.கி.பி 1846 முதல் கி.பி 1850 வரைக்கும். பின்பு கி.பி 1865 முதல் 1883 வரை ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

கி.பி 1858-ல் ஹிஜ்ஜாஜ் மாகாணத்திலிருந்து எகிப்து நோக்கி ..

கடுமையான கொள்ளை நோய் பரவியதால் மக்கள் அனைவரையும் ஹிஜாஜிருந்து எகிப்தில் உள்ள, பிஃர் அன்பர் என்ற பகுதில் (நோயால் பாதிக்கப்பட்டவர்களை) தனிமைப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்ட இடத்திற்கு செல்லுமாறு ஆணையிடப்பட்டது, இந்த ஆணை கொள்ளை நோய் பரவுதலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டது.

.கி.பி‌ 1864 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ஹாஜிகள் மரணம்..

கி.பி 1871-ல் மதினாவில் பரவிய ஆபத்தான நோய்த் தொற்றால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ஹாஜிகள் மரணமடைந்தார்கள். இந்த நோயைக் கட்டுப்படுத்த எகிப்து நாடு மருத்துவர்கள் அனுப்ப நிர்பந்திக்கப்பட்டது.மதினாவிலிருந்து மக்கா செல்லும் வழியை பெரும் கல்லை கொண்டு அடைத்தார்கள் அப்போதும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

கி.பி 1893-ல் பல மரண ஓலங்கள்..

ஹஜ் காலங்களில் காலரா நோயின் பரவியது.அதன் தாக்கம் முன்பைவிட வீரியம் அடைந்தது.நோய் தொற்றில் ஏற்பட்ட மரணங்களால் பல உடல் குவியலாக வைக்கப்பட்டன.அடக்கம் செய்வதற்கு இடமில்லாமல் விழிபிதுங்கி நின்றார்கள்.அரஃபாத் பகுதியில் அதிகமாக மக்கள் மரணமடைந்தார்கள்.அந்த நோயின்‌ நோயின் தாக்கம் மினா பகுதியில் அதிகமாக காணப்பட்டன.அப்போதும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

கி.பி 1895-ல் டைஃபாயிட் நோய்..

மதினாவில் டைஃபாயிட் போன்ற ஒரு தொற்று நோய் அல்லது வயிற்றுப் போக்கை அதிகமாகும் ஒரு வித நோய்  மதினாவில் இருந்து பரவியது. மக்களுக்கு அதிகமாக்கியது. அரஃபாத் பகுதியில் அதனின் தாக்கம் குறைவாக  உணரப்பட்டது. அதன் பின் மற்ற இடங்களில் பரவவில்லை. மினா பகுதியில் இந்த நோயின் தாக்கம் இல்லாமல் இருந்தது .

கி.பி 1987-ல் மூளைக் காய்ச்சல்

   மூளைக் காய்ச்சல் பரவியதால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அந்த நேரத்தில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற  அனுமதிக்கவில்லை.

மூலம் : அரபி

வெளியீடு :இப்ராஹிம் முஹம்மத்

ஆண்டு : பிப்ரவரி 2020

தமிழாக்கம் : ஏ.எச். யாசிர் ஹசனி

Tags: கட்டுரை

Share this