லால்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீக் இளைஞர் அணி,மாணவர் அணி அலுவலகம் திறப்பு விழா
லால்பேட்டை மெயின் ரோடு ராவுத்தர் பில்டிங்கில் நகர இ.யூ.முஸ்லிம் லீக் இளைஞர் அணி,மாணவர் அணி அலுவலகம் திறப்பு விழா 20/03/2020 அன்று நடைப்பெற்றது.
லால்பேட்டை நகர இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார். மெளலானா முஹம்மது அன்வர் ஹள்ரத் கிராஅத் ஒதினார். நகர மாணவர் அணி தலைவர் அஸ்கர் வரவேற்று பேசினார். நகர இ.யூ. முஸ்லிம் லீக் செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிஃப் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
முன்னாள் மாவட்ட தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துல் கப்பார்,மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான்,மாவட்ட துணைச் செயலாளர் தாஜுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணி பொருளாளர் முபாரக் தொகுத்து வழங்கினார். இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான், நகர பொருளாளர் ஏ.எம்.தைய்யூப் முஹிப்பி,நகர துணைச் செயலாளர் அபுசுஹூது, இளைஞரணி தலைவர் மெளலவி மஹபூப் அலி ரப்பானி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில் லால்பேட்டை மாணவர் அணி தலைவராக ஏ.கே.அஸ்கர் அலி, செயலாளராக எஸ்.முஜம்மில், பொருளாளராக ஆத்திப்,துணைத் தலைவர்களாக முஸா ஹிர்,யாகூப் துணைச் செயலாளர்களாக நிஜாம்,அப்துல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் மாணவர் அணி மாநில பொருளாளர் ஏ.எஸ்.அஹமது,நகர துணைத் தலைவர்கள் எஸ்.ஹாமிது, கலிமுல்லா, அமானுல்லா,பஜிலுர் ரஹ்மான், நிர்வாகிகள் மெளலவி ஜியாவுத்தீன், நஜியுல்லா,எம்.ஹெச்.முஹிப்புல்லா,நாசர், சாதுல்லா,பாருக், ஏ.உபைதுர் ரஹ்மான், எம்.உஜைர் அஹமது, ஹிதாயத்துல்லா, ஹஜ்ஜி முஹம்மது ஆகியோர் பங்கேற்றனர்.
மெளலவி ரஹ்மத்துல்லா ஜமாலி துஆ ஓதினார்.Tags: லால்பேட்டை