உலகத்திற்கு பாடம் எடுக்கும் கோரோனா வைரஸ்
கடந்த டிசம்பர் மாதம் சீனா தேசத்தில் பிறந்து இன்று உலகை பல்வேறு தலைப்புக்களில் பாடம் கற்பிக்கிறது தீண்டாமை. சமூக விலகள்
இன்று ஒரு தேசத்தை ஒருமாநிலத்தை ,மாவட்டத்தை ஒர் ஊரை தெரு வை ஓரு வீட்டை ஒதுக்கி வைக்கும் போது அந்த பகுதி மக்கள் மனநிலை எப்படி இருக்கும் இது இந்த வைரஸ் தாக்கம் இருக்கும் வறைத்தான் . இந்த வைரஸ் பாதித்த மக்கள் நிறையபேர் இறப்பதற்கு காரனம் சமூக ஒதுக்களால் மன உளச்சலில் இறக்கிறார்கள் மணிதன் இன்னொரு மனிதனை சந்திக்க அச்சம் இன்று நாம் அனைவரும் தீண்டத்தகாத வர்கள்.இதற்க்கு நமது மனம் தினமும் செத்து கொண்டு இருக்கிறது.சற்று நினைத்து பார்க்கவேண்டும் ஒரு சமுதாயத்தை தீண்டத்தகாத வர்களாக ஒதுக்கி வைத்தோமே இன்றைய நம் நிலை என்ன கோவில் கதவுகள் அனைவருக்கும் அடைக்கப்பட்டது ரேசன் கடைகளில் அரிசி குழாய் வழியாக நாம் வாங்குகிறோம். தனி கப் டீ. கையுறை தரித்த கரங்கள்.தீண்டாமை னகொடுமையை நமக்கு உனர்த்திவிட்டது நிற மத பேதங்கள் கடந்து இன்று இறை மறுப்பாளர்கள் கூட காப்பாற்று கடவுளே என்று பிராத்திகும் நிலை வல்லரசு நாடுகள் நிலை.
எங்களுக்குக்கு இறந்தவர்களை புதைக்க கூட இடம் இல்லை என்று அழுத இத்தாலிய பிரதமர், இஸ்லாம் அழிக்கபட வேண்டிய மதம் என்று சொன்ன சீன அதிபர் இஸ்லாமியர்களே எங்களுக்காக பிரார்தனை செய்யுங்கள் என்று மன்றாடி கேட்டது. இந்த உலக நாடுகளை வின்னில் இருந்தும் மண்ணில் இருந்தும் ஆட்டி படைக்கும் அமெரிக்க மருந்துக்காக இந்தியாவிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறது சூரியன்.உதிப்பது,மறைவதும் எங்கள் நிலபரப்பாகதான் இருக்க வேண்டுமென சொன்ன பிரிட்டன் படு சேதத்தில் பிரதமர் மருத்துவ மனையில். புனித மக்கா.மதீனா நகரங்கள், புனித வாடிகான் சிட்டி.சபரிமலை .திருப்பதி தொடங்கி அனைத்து இறை வழிபாட்டு தளங்கள் அடைக்கப்பட்டன. இருந்தாலும் நாம் இறைவனிடம் தான் கையேந்துகிறோம். அவன் இல்லாமல் ஒரு அனு கூட அசையாது இதுவும் இன்ஷா அல்லாஹ் கடந்து போகும் இதில் இருந்து நாம் பாடம் கற்று தீண்டாமை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம். அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் இந்த வைரஸ் ஒழியும் வரை சமூக விலகளை கடைபிடிப்போம் , பின் கூடி வாழ்வோம் இன்ஷா அல்லாஹ். ~நஜீர் அஹ்மத் அபுதாபி
Tags: கட்டுரை