Breaking News

"அமைதிப்பூக்கள் மலரட்டும்"

நிர்வாகி
0
அரே! பாய் மூடிகிட்டு வீட்டில் இருக்க வேண்டியதுதானே? நம்மவர்களின் ஆற்றாமை பதிவு துளுக்கத்தாயோளி இங்க வராதிங்க.. சங்கிகளின் உலரல்

இந்த இரண்டுக்கும் மத்தியில் பெரும்பான்மையான முஸ்லீம் இளைஞர்கள் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் கவனத்துடன் தொடர்ந்து ஏழைகளுக்குத் தினமும் சேவைகள் செய்து வருவதைப் பார்க்கத்தான் முடிகிறது.

அந்த ஆற்றாமையும், இந்த கதறலும் நிச்சயமாக அவர்களின் காதுகளுக்குக் கேட்கப் போவதுமில்லை ஏனென்றால் இஸ்லாம் மத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதல்ல! அது ஒரு மார்க்கம் நீ சகமனிதனை இப்படித்தான் நேசித்தாக வேண்டும் என்று அவனைப் அந்த மார்க்கம் பணிக்கிறது.

அண்டை வீட்டார் பசித்திருக்கத் தான் மட்டும் உணவருந்துபவன் நம்மைச்சார்ந்தவன் அல்ல! என்கிறார் இந்த மார்க்கத்தைப் போதித்த முஹம்மது நபி[ஸல்] அவர்கள். அவர்கள், அவர் சொன்னதை மட்டுமே கேட்பார்கள் ஏனென்றால் அது தான் எங்கள் நம்பிக்கை அதுதான் இஸ்லாம்.

அவர் போதித்ததைத்தான் நாங்கள் செயலில் காட்ட முடியும் அந்த செயல் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம், ஆற்றாமையும் வரலாம் இதோ அந்த வழிகாட்டியின் வார்த்தைகளைச் சற்று நிதானத்தோடு வாசியுங்கள்

உயிர்களிடமும் இரக்கமும் கருணையும் காட்டுவதே மனிதப்பண்பாகும். நபிகளாரின் வாழ்வெங்கும் இந்த கருணை வெள்ளம் பரந்து விரிந்திருந்தது...

நபிகளாரின் மென்மையான குணத்தையும், மன்னிக்கும் தன்மையையும் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘‘அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பாரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர் களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற் படுத்துவோரை நேசிக்கின்றான்’’ (3:159).

ஒரு மனிதன் நியாயம் இன்றி கொல்லப்பட்டால், அது முழு மனித சமுதாயமும் கொல்லப்பட்டதற்கு சமமாகும்’ என்று கருணையின் உச்சத்தை மனித குலத்திற்கு தொட்டு காட்டியவர் நபிகளார்.

எல்லா உயிர்களிடத்தும் இரக்கமும் கருணையும் காட்டுகின்ற மனிதபண்பை மட்டுமே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

கடந்த நூறு வருடமாக எங்களுக்குள் எத்தனோ இயக்கங்கள் தான், அத்தனையும் ஆம்புலன்ஸ் சேவையிலும், இரத்தம் கொடுப்பதிலும் நீயா நானா முதலில் செய்வது என்ற ஓட்டபந்தயம் மட்டும் தான் நடத்திக் கொண்டிருந்தோம். கஜா புயலோ தானே புயலோ ராணுவம் வருவதற்குள் இவர்கள் போய் நிற்பார்கள். எங்கள் தலைவர்கள் கழுத்தளவு தண்ணீரில் நீந்தி எங்களுக்கு சமூக நேசிப்புக்கான பாடம் நடத்துவார்கள், ஏனென்றால் இதைத்தான் அரசியல் என்று இந்த சமூகத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வரை இந்த சமூகம் இதற்க்கெல்லாம் ஒரு பலனையும் பார்த்ததில்லை.

ஆனால், இங்கே அரசியல் என்பது வெறுப்பை வளர்ப்பது, உணர்ச்சிகளைத் தூண்டுவது, மனிதர்களைக் கொன்று அதை காணொளியாக்குவது, வதந்திகளைப் பரப்புவது, வெறுப்பை உமிழ்ந்து குழந்தைகளைக் கற்பழித்து கொடூரமாய் கொல்வது என இப்படிபட்டாவர்கள் தான் எங்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இட்டு உங்களிடையே வன்மத்தைப் பரப்பி வருகிறார்கள் பொது சமூகமே.

இன்னும் இந்த சமூகம் அச்சத்துடனும், துயரத்துடனும் பெருவலியோடும் தொண்டைக்குள் வைத்து அடக்கிக்கொண்டு விம்மிக்கொண்டு இருக்கிறோம் எல்லாவற்றையும் பொறுமையோடு காரணம் நிச்சயமாக உண்மையானோர்களை அவன் கைவிடுவதே இல்லை என்ற குர்ஆனின் அந்த இறைவசனம் தான். குறிப்பு-

சூழ்நிலை கருதித் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபடும் நண்பர்களுக்கு ஒரு சிறிய ஆலோசனை, உங்களுடைய உதவிகளை ஒவ்வொருவரும் தங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களை மட்டும் தற்ப்போது பார்த்து கொள்ளுங்கள். உதவிகளின் போது முக கவசம், கையுறை கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள்.

இயக்க பிரிவுகளாக தோன்றாமல் சமூகமாக ஒன்றிணையுங்கள். எதிர்காலங்களில் முடிந்தவரை உங்களுடைய சமூக சேவை அமைப்பில் அரசியல் அமைப்புச்சார்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் ஊரில் உள்ள மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள், அரசுத்துறையில் பணிபுரிந்தவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் என ஆலோசனை வளையத்தை உருவாக்கி கொள்ளுங்கள் அதில் விருப்ப்படும் அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து உங்கள் சமூகப்பணியை கவனமுடன் தொடருங்கள்.. இன்னும் வரும்... ரஹமத்துல்லா லால்பேட்டை

Tags: கட்டுரை

Share this