லால்பேட்டையில் வீடுகளில் ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகை
நிர்வாகி
0
இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று திங்கட்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈகைத் திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ஈகைத் திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை கொண்டாடப்படும்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கள் கிழமை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதனால், மசூதிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் ஈகைத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் லால்பேட்டையிலும் முஸ்லீம்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகை நடத்தினர். இவற்றில் சமூக இடைவெளியும் கடைப்பிடித்தனர் .
Tags: லால்பேட்டை