லால்பேட்டையில் இ.யூ.முஸ்லிம் லீக் மத்திய,மாநில அரசை கண்டித்து போராட்டம்
லால்பேட்டை நகர இ.யூ.முஸ்லிம் லீக்கினர் மதுபானக் கடையை திறக்கும் மாநில அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு போதிய நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று நடைப்பெற்ற தொடர் முழக்க போராட்டத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான், நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது, நகர பொருளாளர் ஏ.எம்.தைய்யூப் முஹிப்பி, மாவட்ட துணைச் செயலாளர் தாஜுத்தீன், ஏ.எம்.முஹிப்புல்லா ஆகியோர் தளபதி இல்லம் முன்பு கண்டன கோஷங்களை முழங்கி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான், மாவட்ட இளைஞரணி பொருளாளர் முபாரக், மாணவர் அணி மாநில பொருளாளர் ஏ.எஸ்.அஹமது, நகர பிரமுகர்கள் கே.ஏ. முஹம்மது ஹாஜா, முஹம்மது நூருல்லா ஆகியோரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கருப்பு பேட்ஜ் அணிந்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags: லால்பேட்டை