Breaking News

கத்தார் லால்பேட்டை ஜமாஅத் முயற்ச்சியில் தமிழகம் திரும்பிய தமிழர்கள்!

நிர்வாகி
0
தோஹா ஜூன் 23,

கத்தாரில் கொரானா உடைய தாக்கத்தால் வேலைகளை இழந்தும் , பொருளாதாரமின்றியும், உணவின்றி, மிகுந்த வேதனைகளை அனுபவித்து தமிழகம் செல்லமுடியாமல் தவித்த கர்ப்பிணி பெண்கள், வயது முதிந்தவர்கள், நோயாளிகள் என எங்கள் ஊர் லால்பேட்டை மக்கள் மட்டுமின்றி எங்கள் கோரிக்கைகளை ஏற்று வெளியூர் மக்களுக்கும் தமிழகம் செல்ல விமான டிக்கெட் ஏற்பாடு செய்ய "கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவைக்கு" கோரிக்கை வைத்தோம். அதன் அடிப்படையில் ICBF joint secretary திரு.சந்தோஷ் குமார் அவர்களுடைய உதவியோடு ஜூன் 21 அன்று மதுரை விமான நிலையத்திற்கு 11 பயணிகள் அதில் லால்பேட்டை சார்ந்த மூன்று நபர்களும், கொள்ளுமேட்டை சார்ந்த 2 பயணிகளும் அடங்குவர் அவர்கள் அனைவரும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டு வீடு திரும்பினர்.

ஜூன் 23 அன்று சென்ற விமானத்தில் 7 பயணிகள் அதில் லால்பேட்டை சார்ந்தவர்கள் மூன்று பயணிகளும் மற்றவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்களும் அடங்குவர்.

தாயகம் செல்லும் சில பயணர்களுக்கு மாஸ்க்,கையுறை போன்றவைகள் கத்தார் லால்பேட்டை ஜமாஅத் செயலாளர் அஹமது ரிலா, கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் வலியுல்லாஹ்,இப்ராஹிம் ஆகியோர்களால் கொடுக்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். எங்கள் கோரிக்கைகளை ஏற்று விமான டிக்கெட் ஏற்பாடு செய்துதந்த ஒருங்கிணைந்த தமிழர் பேரவை, கத்தார் இந்திய தூதரகத்திற்க்கும், தமிழகஅரசிற்க்கும்,ICBF.திரு.சந்தோஷ் குமார். ICC தலைவர் திரு.மணிகண்டன், ஆகியோர்களுக்கு எங்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழகம் திரும்பியவர்களுக்கு மதுரை , கோவையில் அவர்களுக்கு தேவையாண ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வைத்திருந்தது, தொண்டு அமைப்புகள் மாவட்ட அரசு நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தமுமுக,முஸ்லீம் லீக்,இதஜ, போன்ற அமைப்புகளின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஞாயிறு இரவு பயணர்களுக்கு உணவு உட்பட அத்தியாவசிய தேவைகள் ஆலோசனைகளையும் வழங்கி சிறப்புடன் செயல்பட்டுள்ளனர்.

கோவையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தமிழம் திரும்பியவர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் அரசு அதிகாரிகள் அவர்களை மாவட்ட வாரியாக பிரித்து பயணர்களின் வசதிக்கேற்ப்ப அந்தந்த பகுதி கொரன்டைனில் தங்க வைக்கப்பட்டு அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டு பயணர்களின் இல்லம் அனுப்பிவைக்க ஏற்ப்பாடு செய்து வருகின்றனர்.

Tags: உலக செய்திகள் லால்பேட்டை

Share this