தமுமுக மமக சார்பில் லால்பேட்டை மின்சார வாரியத்தில் புகார் மனு
மின்சார வாரியத்தின் ரீடிங் முரண்பாடு சிக்கல்களினால் அளவுக்கு அதிகப்படியான தொகை வந்ததின் காரணமாகவும் அடிக்கடி மின்துண்டிப்பு ஏற்படுவதின் காரணமாகவும் ஏராள மக்களின் புகாரின் அடிப்படையில் இன்று (05/06/2020) வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் தமுமுக-மமக மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகத்தினர் லால்பேட்டை மின்சார வாரியத்திற்கு நேரில் சென்று AE யை சந்தித்து மனு அளித்தனர். மேலும் AD மற்றும் EE அலுவலர்களை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு முறையிடப்பட்டது.
குறிப்பு: மின்கட்டணம் முரண்பாடு இருக்கும் வாடிக்கையாளர்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கு முன்பு மின்சார அலுவலகத்திற்கு சென்று அலுவலர்களை சந்தித்து சரிபடுத்திவிட்டு மின்கட்டணம் செலுத்தலாம் என்று வாக்குறுதியும் அளித்துள்ளனர். லால்பேட்டை தமுமுகவின் புகார் மனுவை ஏற்று கொண்ட லால்பேட்டை மின்சார வாரியம் துரிதமாக சரிசெய்து தருவதாக உயர் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
Tags: லால்பேட்டை