Breaking News

துயர் களையப் பாடுபட உறுதி எடுப்போம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தியாக திருநாள் வாழ்த்து செய்தி

நிர்வாகி
0

இஸ்லாம் மார்க்கத்தின் இரு பெரும் பண்டிகைகளில் ஒன்றான தியாக பெருநாளை (ஈதுல் அழுஹா) கொண்டாடும் அனைவருக்கும் அகங்கணிந்த நல்வாழ்த்துகளத் தெரிவித்து கொள்கிறேன். கோவிட் 19 –தீ நுண்மித் தொற்றினால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கிக் கிடக்கின்றது. உலக வரலாறு இதற்கு முன் இப்படி ஒரு நிலையைச் சந்தித்ததில்லை.

இஸ்லாம் வலியுறுத்தும் தியாக உணர்வு எந்த அளவுக்கு மனிதகுல நன்மைக்கு வழி வகுக்கின்றது என்பதை இந்தக் கொடிய கொரோனா நோய்த் தொற்று காலத்தில் முஸ்லிம் சகோதரர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆற்றி வரும் மனிதநேயப் பணிகளிலிருந்து அறியலாம்.

சக மனிதர்களின் துயர் களைவதும் இறைவணக்கமே என்று இஸ்லாம் போதிக்கின்றது. இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையும் இதையே கற்றுத் தருகிறது. உனக்கென எதனை விரும்புவாயே அதனையே பிறருக்கும் விரும்பு என்று கற்று தந்தார்கள் நபிகள் நாயகம். தனிப்பட்ட இறை நம்பிக்கையையும் தியாக உணர்வும் தரணியெல்லாம் வாழும் மக்களுக்கு நல்லுதவியாக அமைவதை இஸ்லாமிய வாழ்வியல் சாத்தியப்படுத்தியுள்ளது. இந்நன்னாளில்

முஸ்லிம்கள் மென்மேலும் தியாக உணர்வோடு சகோதர சமுதாயங்களின் துயர் களையைப் பாடுபட உறுதியேற்போம். நம்முடைய தாய்நாடாம் இந்தியா இந்த நெருக்கடிக் காலத்திலிருந்து மீண்டு அன்பும் அமைதியும் செழிப்பும் நிறைந்த தேசமாய் உயர்ந்தோங்கிட இந்நன்னாளில் பிரார்த்திப்போம். அதற்காக அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றிடுவோம். கொடிய கொரோனாவிலிருந்து உலகம் மீளட்டும். அன்பும் அமைதியும் அகிலத்தை ஆளட்டும் அனைவருக்கும் இதயங்கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள் 

அன்புடன் எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Tags: சமுதாய செய்திகள்

Share this