Breaking News

லால்பேட்டை இமாம்புகாரி பள்ளியில் 74வது சுதந்திர தின கொடியேற்று விழா..!

நிர்வாகி
0
லால்பேட்டை இமாம்புகாரி பள்ளியின் சார்பில் சுதந்திரதினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களின் வருகை இல்லாவில் பெற்றோர்கள், ஆசிரியைகள், ஊர்மக்கள் என வருகைதந்தோருடன் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் மௌலவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ அவர்கள் கொடியேற்றினார். இந்நிகழ்வில் கொரோ தடுப்பு நடவடிக்கைக்காக உழைத்த டாக்டர் பெருமாள்சாமி MBBS அவர்களையும், லால்பேட்டை பேராட்சி செயல் அலுவலர் அவர்களையும் அழைத்து அவர்களிருவருக்கும் பொன்னாடைப் போர்த்தி மரியாதை செய்து, தப்ஸீர் ஷஃராவி நூல் நினைவுப் பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மனிதநேய மக்கள்கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது அய்யூப், லால்பேட்டை அரசு மேநிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைமை நிர்வாகி எம் ஜெ பத்ஹுத்தீன், மவ்லவி ஹாபிள் பைஜுல் அமீன் காஷிஃபி, ஜபருல்லாஹ், முபீத் அஹ்மத், சகீன் அஹ்மத், கிபாஃயதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this