Breaking News

மர்ஹும் ஹாஜி எஸ். முஹம்மது இப்ராஹிம் நினைவேந்தல் நிகழ்வு

நிர்வாகி
0

 

லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் மற்றும் இமாம்  லால்பேட்டை கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்த மர்ஹும் ஹாஜி எஸ். முஹம்மது இப்ராஹிம் அவர்களின் சேவைகளை நினைவு கூறும் விதமாக இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு 02/08/2020 ஞாயிற்று கிழமை காலை 11 மணியளவில் ஜூம் செயலி மூலமாக நடைபெற்றது .

ஆரம்பமாக இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மப்ரூர் அஹமது கிராஅத் ஓதினார். அகிலங்கள் அத்தனையும் என்ற இறை புகழ் பாடலை ஷபீக்குர்ரஹ்மான் பாடினார்.ரைசுல் இஸ்லாம் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார், அஹமது ரிலா வரவேற்புரையாற்றினார், இவர்களுடன் பக்க துணை நின்று முஹம்மத் காமில், சிராஜுல் அமீன், ஹம்மாத் அஹமது , இனாமுல் ஹசன், முஹம்மது இஸ்மாயில், ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க தலைவர் ஜனாப். A.R.அஹமதுல்லா அவர்கள் நினைவேந்தல் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜனாப்.A.அஸ்கர் ஹுசேன் அவர்கள், பொருளாளர் ஜனாப். M.A.அஹமது அவர்கள் மற்றும் முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கத்தின் மூத்த நிர்வாகிகளான ஹாஜி S.ஜாபர் அலி, கவிஞர் ஹாஜி P.A.நஜிர் அஹமது, கவிஞர் ஹாஜி A.M.முஹிபுல்லா ஆகியோர்கள் மர்ஹும் எஸ். முஹம்மது இப்ராஹிம் அவர்கள் கல்விச் சேவைகள் குறித்த நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். இந்நிகழ்வுகளை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், சமுதாய பெருமக்கள், இந்நாள் முன்னாள் மாணவர்கள் என பலர் ஜூம் செயலி மற்றும் முகநூல் நேரலை வாயிலாக கண்டனர். நிகழ்வின் முடிவில் சபீர் அஹமது நன்றி கூறினார்.

குறுகிய இடைவெளியில் இணைய வழி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் மற்றும் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்த மர்ஹும் ஹாஜி எஸ். முஹம்மது இப்ராஹிம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று கருத்துரை வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும் , இணையவழியில் இந்நிகழ்வுகளை பார்த்த ஊர் பெருமக்களுக்கும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..





Tags: லால்பேட்டை

Share this