Breaking News

மதவாத அரசியலுக்கு முன்_காங்கிரஸ் மண்டியிடுவதை ஏற்க முடியாது : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு

நிர்வாகி
0
அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா இன்று. இது தேசிய ஒற்றுமையாம்; நாட்டின் சகோதரத்துவமாம்; தேசத்தின் கலாச்சாரம் இதுதானாம். பிரியங்கா காந்தியின் அறிக்கை தரும் நவீன கண்டுபிடிப்பு.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் ஆட்சேபனை. மதவாத அரசியலுக்குமுன் காங்கிரஸ் மண்டியிடுகிறது எனும் சந்தேகம் பிறக்கிறது. இன்று 05/08/2020 காலை 11 மணி அளவில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் அதன் தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் அறிக்கைக்கு கடும் ஆட்சேபனைத் தெரிவித்தும், அவரது இக்கருத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்த விதத்திலும் உடன்படாது என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை செய்தியாளர்களுக்குத் தெரிவிப்பதற்கு முன்னதாக, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தேசிய பொதுச்செயலாளர் P.K. குஞ்ஞாலி குட்டி MP அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகத் தகவல் தந்தார்கள். தொடர்ந்து, நமது தேசிய அமைப்புச் செயலாளர் E.T. முகம்மது பஷீர் MP அவர்களும் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்க இருக்கிற இத்தீர்மானத்தின் மையக்கருத்தை தொலைபேசியில் விளக்கிச் சொன்னார்கள். "இதில் வேறு எந்த மாற்றமும் தேவையா?" எனவும் வினவினார்கள்.

அக்கணப் பொழுதில், நமது தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் ஏற்பட்டிருக்கும் ஒரு இடைவெளியை என்னால் உணர முடிந்தது. வல்ல அல்லாஹ்வின் பெருங்கருணை கொண்டு விரைவில் உடல் நலம் தேறி, எப்போதும் போல் முஸ்லிம் லீகின் தலைநாயகராய் சமூக அரசியல் தலத்தில் தலைவர் அவர்கள் தொடர்ந்து பவனி வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்., இன்ஷா அல்லாஹ். அந்த நன்னாளை எதிர்நோக்கி வல்ல இறைவனிடம் கையேந்தி நிற்போம். இறைவா! உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்; எங்களின் துஆவை ஏற்றுக் கொள்வாயாக! ஆமீன். M. அப்துல் ரஹ்மான் மாநில முதன்மை துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

Tags: செய்திகள்

Share this