Breaking News

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறைக்கு லால்பேட்டை நஜீர் அஹமது கோரிக்கை..!

நிர்வாகி
0

அமீரகத்தின் புதிய அறிவிப்பு வெளியான நான்கு தினங்களில் ரத்து செய்யப்பட்டதால்,விமான டிக்கெட் எடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்களில்பலர்,பயணம் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்லத்தக்க குடியிருப்பு விசா உள்ள இந்தியர்கள்,அபுதாபி சர்வதேசவிமானநிலையம் வருவதற்கு, "அடையாளம் மற்றும் குடியுரிமை கூட்டமைப்பு ஆணயத்திடம் (ica ) இனி அனுமதிபெறத் தேவையில்லை,என நிபந்தனை தளர்த்தி கடந்த ஆகஸ்ட் 11ந் தேதி அறிவிப்பு வெளியானது.

இணைய இதழ்கள் மூலம் இந்தச் செய்தி பரவியதும் அமீரகத்தில் வசிக்கும் பலர் ica அனுமதிகிடைக்காமல் ஊரில் தவித்துவந்த உறவினர், நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்து ,உடனே அமீரகம் திரும்பிவரும்படி அழைப்பு விடுத்தனர். இந்திய விமான நிறுவனமும் அமீரகத்தின் இந்த புதிய அறிவிப்பை உறுதிசெய்து விமானடிக்கெட் விற்பனை செய்தது.

இதனையொட்டி, மத்திய அரசின் "வந்தேபாரத்"பயணத் திட்டத்தில் இயங்கும் விமானம் மூலம் அபுதாபி செல்வதற்கு வெளிநாடுவாழ் இந்தியர்களில் பலர் ஆன்லைன் மற்றும் பயண முகவர் மூலம் விண்ணப்பித்து விமான டிக்கெட் வாங்கி பயணத் தேதியை உறுதிசெய்து கொண்டனர்.

இந்த நிலையில்தான் அமீரகம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முந்தைய அறிவிப்பினை ரத்து செய்து மீண்டும் புதியதொரு அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் ஆகஸ்ட் 11 முதல் 14 வரை விமானடிக்கெட் எடுத்த பயணிகளில் பலபேருக்கு, புதிய அறிவிப்பின் அடிப்படையில் பயண அனுமதி மறுக்கப்பட்டது.

பொருளாதாரம் முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டச் சூழலிலும் விமானடிக்கெட், தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனகட்டணம் வாடகைக்கார் செலவு செய்து விமானநிலையம் சென்றபயணிகளில் பலபேர் பயணம்செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பபட்னர் ஆகவே பொருளாளாதாரத்திலும்மனதளவிலும் பெரும்பாதிப்பு அடைந்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மீண்டும் நுழைவு அனுமதி கிடைக்கும்போது இதே விமான டிக்கெட்டில் மறுபடியும் பயணம் செல்லும் வகையில் கட்டணமில்லாமல் தேதிமாற்றம் செய்து கொடுத்திடவும் பயண அனுமதி கிடைக்காத நபர்களுக்கு கட்டணத்தொகை முழுவதையும் பிடித்தம் செய்யாமல் திருப்பி தரவேண்டும் என விமான நிறுவனத்திற்கு அறிவுறுத்துமாறும் பாதிப்புக்கு உள்ளான பயணிகளின் நலனைகாப்பதில் மத்திய விமான போக்குவரத்துஅமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டும் 

 நஜீர் அஹமது 

 மாவட்டதுணைத்தலைவர் 

 இந்தியதேசிய காங்கிரஸ் கடலூர் ( தெற்கு )

Tags: செய்திகள்

Share this