Breaking News

வெந்நீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் :

நிர்வாகி
0

தினமும் வெந்நீர் பருகுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். வெந்நீரை தினமும் பருகும் போது உடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ளவும் உதவுகிறது

காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் தினமும் காலையில் சுடுதண்ணீரில் எலுமிச்சையை கலந்து பருகினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கீழ் வாதம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும்.உணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும்.

சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகள் சரியாகும். அளவுக்கு அதிகமாக உணவு, எண்ணெய் பலகாரம், இனிப்பு, போன்றவை சாப்பிட்டால் சில நேரங்களில் நெஞ்சு கரிக்க தொடங்கும்.அப்போது ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகினால் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும், உணவும் செரித்து விடும். அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது. மேலும் தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் பருகினால் மலச்சிக்கல் தீரும்.இரவு தூங்குவதற்கு முன் பருகினால் புளித்த ஏப்பம், வாயுப்பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும். வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

வெந்நீரில் சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு, சீரகம் ஆகியவை போட்டு குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் கனிசமாக குறையும். குறிப்பாக சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் வெந்நீரே சிறந்த மருந்தாக செயல்படும். மேலும் வெந்நீர் பருகுவதால் உடலில் இருந்து வேர்வை அதிகமாக வெளியேறும். அதனுடன் சேர்ந்து உடலில் உள்ள நச்சுகளும் வெளியேறி உடல் சுத்தமாகும்.

வெந்நீர் பருகுவது முடி உதிர்வை குறைத்து முடியின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். தலையில் உள்ள பொடுகையும் கட்டுபடுத்தும். இருமல் மற்றும் சளி ஏற்பட்டால், நம் தொண்டையின் டான்சிலில் அதிக வலி ஏற்படும். அப்போது, வெந்நீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்; நீர்மமாக உள்ள சளியைக் கெட்டியாக்கி வெளியேற்றும். நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, ரத்தக் குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலின் ரத்த ஓட்டமும் மேம்படும்.

வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது. இதன் மூலம் நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மேம்படும். மேலும், வெந்நீர் அருந்துவது மூலம் உடலில் நச்சுகள் வெளியேறுவதால் வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப்போடப்படும்.

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது. மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும். தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.

மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புகள் அகன்றுவிடும் என கூறப்படுகிறது. வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது.

Tags: பயனுள்ள தகவல்

Share this