Breaking News

உலகதமிழர்களுக்கானசிறப்புபாடல்வெளியீடுமற்றும் உலகதமிழர்களுக்கானதன்னார்வசேவைமையம்துவக்க விழா..!!

நிர்வாகி
0
உலக ஒருங்கிணைந்த தன்னார்வலர்கள் முன்னிலையில் துவங்கப்பட்டது..! கத்தார். செப்,12.

கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் ஆலோசனை குழு உறுப்பினரும் IonTach Academy தலைமை நிறுவனருமான S. சாதிக் பாட்ஷா அவர்களின் தலைமையில்

திரைகடல் கடந்து தன் குடும்பத்திற்க்காக வாணிபம் மற்றும் வேலை நிமித்தம் வெளிநாடு சென்று எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் இனமானம் காத்து தமிழையும், தாய்நாட்டையும் உயிராக நேசிக்கும் ஒவ்வொரு உலகத்தமிழர்களுக்குமான சிறப்பு பாடல் வெளியீடு நிகழ்ச்சி மற்றும் உலக தமிழர்களுக்கான தன்னார்வ சேவை மையம் துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்வை திருமதி.பிரியதர்ஷனி PD அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி தொகுத்து வழங்கி உலக தமிழர்களுக்கான பாடல் வெளியீடு,உலக தமிழர்களுக்கான தன்னார்வ சேவை மையம் துவக்கத்தின் அவசியம் சிறப்பினைப்பற்றி விளக்கினார் சிறப்பு அழைப்பாளர்களாக திரு.இயக்குனர் அமீர் அவர்கள் திரு.விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் திரு.மருத்துவர் கஸாலி அவர்கள் திருமதி.சமூக ஆர்வலர் மயூரி அவர்கள் திரு.கரீம் டைம் கரீம் அவர்கள் திரு.அஸ்கர் அலாவுதீன் (IonTach Academy Vice President) ஆகியோர் பங்குகொண்டு சிறப்புரையாற்றி பாடல் வெளியீட்டினை திரு.விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் வெளியிட்டு திரு.இயக்குனர் அமீர் அவர்கள் பெற்றுக்கொண்டு மக்களுக்கு வெளியிடப்பட்டது இதனை தொடர்ந்து திருமதி.மயூரி கண்ணன் அவர்கள் உலக தன்னார்வ சேவை அமைப்பின் விளக்க உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை வழங்கிய திரு.அஸ்கர் அலாவுதீன் சிறப்புரையாற்றி தொடர்ந்து திரு.முகம்மது ரியாஸ் ஆகியோர் வாழ்த்தினர்.

அதனை தொடர்ந்துதிரைமறைவில் இருந்து இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த IonTach Academy இயக்குனர் திரு.ஹாஜா மைதீன், HMH நிறுவன தலைவர் திரு.இக்பால் HMH இயக்குனர் திரு.கஸாலி மற்றும் கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் தலைவர் சமீர் அஹமது செயலாளர் ஹாஜிமுகம்மது. பொருளாளர் வலியுல்லாஹ். துணைதலைவர் இப்ராஹிம். துணைச்செயலாளர்கள் சீனிவாசன்,குமார்,மருத்துவ ஒருங்கிணைப்பாளர் திருமதி.ரெஜினா பேகம். ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.

நிகழ்வின் இறுதியில் திரு. ஸ்டாலின் அவர்கள் தமிழின் சிறப்பு தமிழர்கள் பெருமிதம் போன்றவற்றை எடுத்துரைத்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அன்புடன்:

ஒருங்கிணைந்ததமிழர்பேரவை

கத்தார்

Tags: உலக செய்திகள்

Share this