Breaking News

லால்பேட்டை மக்களுக்கு ஓர் விழிப்புணர்வு பதிவு..!

நிர்வாகி
0

கொரோனா இன்று உலகத்தை முடக்கி போட்டு கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது . கடந்த இரண்டு வாரமாக நமது ஊர் மக்கள் காய்ச்சல்.சளி. போன்றவைகளால் பாதிக்கப்பட்டு நமது ஊர் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன இது அலட்சியமாக கடந்து செல்ல வேண்டிய விசயம் அல்ல .

நமது லால்பேட்டை யில் ஓர் இருவருக்கு நொய்த்தொற்று இருந்த போது இருந்த விழிப்புணர்வு இன்று இல்லை அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை மட்டுமே சொல்ல முடியும் அதை மக்கள்தான் கடைபிடிக்க வேண்டும் .

பள்ளிவாசல்களில் தொழுகையில் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் மக்கள் .பள்ளி வாசல் கட்டை களில் அருகருகே அமர்ந்து பேசுவதும் திருமண விருந்து.இறந்தவர்களின் வீடு கடை தெரு.இவைகளில் கடைபிடிக்கவில்லை முககவசங்கள் அணிவது இல்லை

இன்றை லால்பேட்டை நிலவரம் கொரோன பதிப்பு தெருவுக்கு ஓரிரண்டு இருக்கிறது மக்கள் மிகுந்த விழிப்புனர்வுடன் இருக்க வேண்டிய நேரம் இது.

இந்த நொய்தெற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் வீட்டுக்குள்ளேயே தனிமை படுத்தி கொள்ளுங்கள் . பொது இடங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். திருமணம், விருந்து நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். தேவை இல்லாமல் வெளிய செல்வதை தவிர்க்க வேண்டும் அரசு மற்றும் காவல் துரை கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்பதற்காக நாம் அலட்சியமாக இருப்பது நமது உயிருக்கு மட்டுமல்ல நமது குடும்பத்தார். ஊர் மக்களுக்கும் ஆபத்து. நமதூர் சமூக நல அமைப்புகள் அரசியல் அமைப்புகள் விறைவாக மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துங்கள். இது வரை பல உயிரிழப்புகளை சந்தித்துள்ளோம் சிலர்.மருத்துவ மனைகளிலும் .வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்கள் அனைவருக்கும் வள்ள ரஹ்மான் பூரன உடல் நலத்தை தருவானாக. விழிப்புணர்வுக்காக. நஜீர் அஹ்மத், அபுதாபி.

Tags: லால்பேட்டை

Share this