Breaking News

லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அவசரக் கூட்டம் நடைபெற்றது

நிர்வாகி
0

லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் 4-9-2020 அன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1. நமதூரில் காய்ச்சல், சலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுபவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி லால்பேட்டை ஹெல்த் கேர் சென்டர் அறக்கட்டளை மூலம் ஆக்ஸிஜன் வைத்து மருத்துவம் செய்வது என்றும்

2.மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் லால்பேட்டை ஹெல்த் கேர் சென்டரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது

3. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களும் மற்றும் வயது முதிர்ந்தவர்களும் பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது

4. நமதூரில் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 8 வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும்

5. நமதூரில் அனைத்து மஹல்லாக்களிலும் கேன் மூலம் டீ விற்பனை செய்பவர்கள் வாகனங்களில் காய் கறி போன்ற பொருட்கள் விற்பனை செய்பவர்களை அந்தந்த மஹல்லா முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் படுகிறது

6. ஊரடங்கு சட்டம் முற்றிலும் நீக்கப் படும் வரை முசாஃபிர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது

7. பொது இடங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அனைவரும் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும் என்றும் கடைத்தெருக்கள் மற்றும் நமதூரின் எந்தப் பகுதியிலும் கூட்டம் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் படுகிறது

8. ஜாமிஆ மன்பஉல் அன்வார் நிர்வாகத்தையோ, லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தையோ ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தவறான முறையில் யாரும் விமர்சனங்கள் செய்யக் கூடாது என்றும் மீறினால் ஜமாஅத் மூலம் விசாரிக்கப் படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது

Tags: லால்பேட்டை

Share this