Breaking News

ஆட்சிமொழியாகும் தகுதி தமிழுக்கு மட்டுமே உண்டு - காயிதே மில்லத்

நிர்வாகி
0

1949ஆம் ஆண்டு இந்திய தேசிய அரசியலமைப்பு நிர்ணய கூட்டத்தில் தமிழகம் சார்பாக கலந்து கொண்டிருந்தார் இஸ்மாயில் சாஹிப் என்ற "கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்" அவர்கள்.

அப்போது ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வட இந்தியர்கள் கோரிக்கை வைத்தனர். நிர்ணய சபை கூட்டத்திலிருந்த இவர்,

"ஒரு மொழி இந்திய மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அம்மொழி நாட்டின் பழைமையான மொழியாகவும் இருக்க வேண்டும் அத்தகைய மொழியையே தேசிய மொழியாக்க வேண்டும். "இந்த நாட்டில் பழமையும் உறுதியும் கொண்ட ஒரே மொழி தமிழ்தான். அது எனது தாய்மொழியும் கூட , நீங்கள் எந்த ஒரு வரலாற்று ஆய்வாளரிடமும் இந்தக் கூற்றை விவாதித்துப் பாருங்கள், நான் சொன்னதுதான் நிஜம்"

என்று ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழியை தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் இவர்தான்.

இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதல் அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்றத்திலும் மாநாட்டு அரங்குகளிலும் நாட்டு ஒற்றுமைக்கு உகந்த மொழிக் கொள்கைகளை ஓயாது முழங்கிய தனிச்சிறப்பும் பெருமையும் காயிதெ மில்லத் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அவர்களின் வழியொற்றியே, மற்ற தலைவர்கள் பின்னர் பேசத் தொடங்கினர்.

யாரும் எண்ணிப் பார்த்திராத காலத்தில், இந்தியப் பெருநாட்டின் தேசிய மொழியாக, ஆட்சி மொழியாக திகழும் சிறப்பு தமிழுக்குத்தான் உண்டு என்று அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் முழக்கமிட்டது சரித்திரம். இந்திமொழி பெறக்கூடிய தகுதியை அந்தஸ்தை எல்லா மொழிகளும் பெற்றாக வேண்டும் என்று உரிமைக்குரல் கொடுத்த பெருமகன் காயிதெ மில்லத் அவர்கள்.

(நன்றி: நக்கீரன் உள்ளிட்ட இணைய தளங்கள்)

மவ்லவி ஜே எஸ் ரிஃபாயீ

Tags: செய்திகள்

Share this