Breaking News

லால்பேட்டை அர்-ரஹ்மான் ஜமாஅத் மாதாந்திர செயற்குழு கூட்டம்

நிர்வாகி
0

லால்பேட்டை அர்-ரஹ்மான் ஜமாஅத் மாதாந்திர செயற்குழு கூட்டம் 04-09-2020 வெள்ளி கிழமை மாலை நடைபெற்றது மௌலவி T.N.ஜாபர் அலி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்கபட்டது தலைவர் S.M.முஹம்மது நாசர் அவர்கள் சிறப்புரையாற்றினார் செயற்குழுவிற்கு அழைப்பினை ஏற்று வருகை புரிந்த நிர்வாகிகள் நன்றி தெரிவித்து பின்பு இமாம் கஸ்ஸாலி மேல்நிலைப் பள்ளி தாளாளர் S.முஹம்மது இப்றாஹீம் அவர்கள் மறைவிற்கும் லால்பேட்டை பைத்துல்மால் தலைவராக இருந்த ஆலக்கார் ஹாஜி.குத்புதீன் மறைவிற்கும் மற்றும் ஹிப்ஜுல் உலமா ஹாபிஜ் பைஜூர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் மறைவிற்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் அவற்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யபட்டது

மேலும் லால்பேட்டை பைத்துல்மால் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட அல்ஹாஜ் M.A.முஜம்மில் அவர்களுக்கும் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட கத்தார் ஜமாஅத் நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது லால்பேட்டை மறுத்துவ அறக்கட்டளைக்கு உறுப்பினர்கள் பணம் செலுத்தும் கால அவகாசம் நவம்பர் -2020க்குள் முடித்து விட வெண்டும் என்று அறிவுருத்தப்பட்டது பின்பு செயலாளர் O.H.சல்மான் பாரிஸ் அவர்கள் 2020 ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் முடிய வரவு செலவுகள் வாசித்து பொருலாளர் A.முனவ்வர் ஹூசைன் அவர்களிடம் சமர்பிக்கப்பட்டது

Tags: லால்பேட்டை

Share this