லால்பேட்டை அரசு மேலநிலைப் பள்ளியில் ஆண்டு விழா
கடலூர் மாவட்டம் லால்பேட்டை அரசு மேல்நிலைப்பாளியில் ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைப் பெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமுருகன் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்ஹூத்தீன் முன்னிலை வகித்தார் உதவி தலைமை ஆசிரியர் கார்திகேயன் வரவேற்புரையாற்றினார் ஆசிரியர் சண்முக சுந்தரம் ஆண்டு அறிக்கை வாசித்தார் பேரூராட்சி மன்ற தலைவர் பாத்திமா ஹாரிஸ் துணை தலைவர் அன்வர் சதாத் மன்ற உறுப்பினர்கள் அப்துல் ரஷீது, லுத்து புல்லா, அப்துல் ரசீது சுஹைபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது இன் நிகழ்ச்சியில் எஸ் எம் சி தலைவர் பைஜியா பேகம் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் மர்ஜுக் பொருலாளர் முபீத் அஹமது நிர்வாகிகள் ரியாஜுல்லா நிசார் அஹமது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் உடற்கல்வி ஆசிரியர் தம்பு ராஜவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பள்ளி ஆண்டு விழா நினைவாக பள்ளி வளாகத்தில் உள்ள மௌலானா அப்துல் கலாம் ஆசாத் நினைவு பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
Tags: லால்பேட்டை