லால்பேட்டையில் மஜகவினர் பேராட்டம்...
வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லால்பேட்டை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் H.ஜாபர் சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மஜகவினர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் மசோதாவை எதிர்த்தும் மாட்டுவண்டியில் ஏறி முழக்கங்களை எழுப்பினர்.
மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி.இப்ராஹிம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், துணை செயலாளர் s.கியாசுதீன், இளைஞரணி செயலாளர் நைனா முஹம்மது, MJVS மாவட்ட செயலாளரும், எள்ளேரி ஊராட்சி மன்ற து. தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், மாணவர் இந்தியா துணை செயலாளர் பைசல், நகர பொருளாளர் யூனுஸ், துணை செயலாளர் பிரபு உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை