சிதம்பரம் நகரில் மீலாது நபி விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
சிதம்பரம் நகரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின மீலாது விழாவை முன்னிட்டு 30/10/2020 வெள்ளிக்கிழமை காலையில் சிதம்பரம் நகர ஜமாஅத்தார்கள் சார்பில் சிதம்பரம் காமராஜர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு பிரட்,பழம் வகைகளும், முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு, மதிய உணவு, பழங்கல் வழங்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான், காமராஜர் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் அஷோக் பாஸ்கர், மருத்துவர் பி.ரவி, சிதம்பரம் தர்காக்கள் பேரவை தலைவர் கவிஞர் மஹபூப் ஹூஸைன்,பைசல் மஹால் பி.எம்.யாஸீன்,மெளலவி ஹஜ்ஜி முஹம்மது ரப்பானி,செய்யது மொகிதீன்,முஜம்மில் ஹூஸைன்,முபாரக் அலி,ஜாக்கிர் ஹூஸைன்,எள்ளேரி ஆரிஃபுல்லா, லால்பேட்டை அஹமது,மருத்துவ செவிலியர்கள் மற்றும் முதியோர், காப்பக பொருப்பாளர் சுகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
Tags: சமுதாய செய்திகள்