Breaking News

ஹாஜிகளின் சேவகர்,கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத்தின் அடையாளமாக திகழ்ந்த சமூக சேவகர் லால்பேட்டை அல்ஹாஜ் எம்.ஏ.ஃபத்தஹுத்தீன் பாய் அவர்களின் சேவைகள்!

நிர்வாகி
0

லால்பேட்டை நகர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற பேராவல் கொண்டு செயலாற்றியவர். இவர் 1963 முதல் 1970 வரை இந்திய ராணுவ மருத்துவ பிரிவில் சேவை புரிந்துள்ளார். 1965 -ல் இந்திய-பாக் இடையே நடைபெற்ற யுத்தத்தில் லுதியானா பகுதியில் பங்கேற்றார். அதற்காக அரசு பரம்வீர் சக்ரா விருது பெற்றுள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தமிழ்நாடு அரசு பணியில் ஓராண்டு வீரப்பெருமாநல்லூர் அரசு மருத்துவமனையில் MNA ஆக பணியாற்றியுள்ளார்.

அதன்பிறகு 1970 முதல் 1984 வரை அ.இ.அ.தி.மு.க கழக நகர செயலாளராக பொறுப்பு வகித்து அ.இ.அ.தி.மு.க கழக வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளார். 2003 முதல் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பயிற்ச்சியாளராக பொறுப்பேற்று ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு நல்ல வழிகாட்டியாக, ஆலோசகராக திகழ்ந்து சேவையாற்றியுள்ளார். 5 முறை ஹஜ் செயதுள்ள இவர் 1994 ஆம் ஆண்டு பயண ஏற்பாட்டு நிறூவனத்தின் சார்பாக ஹஜ் வழிகாட்டியாக (ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களுக்கு) திகழ்ந்துள்ளார்.

லால்பேட்டை நகர பேரூராட்சி மன்றத் தலைவராக 2000 முதல் 2003 வரை ஊருக்காக பணியாற்றியுள்ளார், முபாரக் ஜும்மா மஸ்ஜித் முத்தவல்லியாகவும் 6 ஆண்டுகாலம் பொறுப்பு வகித்துள்ளார். ஜே.எம்.ஏ அரபிக்கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தற்போதைய ஐக்கிய ஜமாஅத் லால்பேட்டை நகர செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். கடலூர் மாவட்ட முஸ்லிம் பெண்களுக்கு உதவும் சங்க எளிய ஆயுள்கால உறுப்பினராக திகழ்ந்து ஏழை தையல் மிஷின், பொருளாதார உதவி வாங்கிக் கொடுத்துள்ளார்.

லால்பேட்டை பெயர்பெற்ற பாவா ஹோட்டல் உரிமையாளர், பூங்காவீதி அரசுப் பள்ளி தலைவர், லால்பேட்டை cooperative society துணை தலைவர்,லால்பேட்டை அரசு மருத்துவமனை அமைக்க தொடர்ந்து அரசுமட்டத்தில் இருந்து முயற்ச்சி செய்தவர்.

சமூக பிரச்சனை சார்ந்த விஷயங்களை தினசரி பத்திரிக்கை வாயிலாக அறிக்கை விடுவதும், லால்பேட்டை மக்களின் குறைபாடுகளை மாவட்ட ஆட்சியரின் தனி கவனத்திற்கு கொண்டு செல்வதும் இவரது செய்த சமூகப்பணியில் தலை சிறந்த செயலாகும்.

லால்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைய முயற்ச்சிகளை மேற்கொண்டவர்களில் இவரும் ஒருவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹாஜி M. A. பத்தஹுத்தீன் பாய் அவர்களின் சேவைகளை பொருந்தி நற்கூலியை வழங்குவானாக,

அவர்களின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை தந்தருள்வானாக.

ஆமீன்.

Tags: லால்பேட்டை

Share this