Breaking News

லால்பேட்டையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0

இன்று மாலை லால்பேட்டை கைகாட்டியில் லால்பேட்டை அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் பாபர் மசூதியை இடித்தவர்கள் குற்றமற்றவர்கள் என்று லக்னோ சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மிக எழுச்சியுடன் மக்கள் திரள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தேசிய லீக் கட்சியின் நவ்வர் உசேன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ நீதிமன்றத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது பிறகு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பேச்சாளர் சர்புதீன் அவர்களும் இஸ்லாமிய தஃவா குழு ஒருங்கிணைப்பாளர் கமாலூதீன் மன்பஈ அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக முஹம்மது பைசல் அவர்கள் நன்றியுரை கூறி கண்டனம் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சமுதாய கட்சிகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து சமுதாய கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும்

அனைத்துக் கட்சியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tags: லால்பேட்டை

Share this