லால்பேட்டையில் உ.பி. ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து இ.யூ. முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் தி.மு.க, காங்கிரஸ் பங்கேற்ப்பு
உ.பி. ஹத்ராஸில் நடந்த பலாத்கார கொலையினைக் கண்டித்தும், காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்க்கு நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார், நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் வரவேற்றார், நகர பொருளாளர் தய்யூப், கண்டன உரையை தொகுத்து வழங்கினார்.பரங்கிப்பேட்டை நகர செயலாளர் மௌலானா ஷேக் ஆதம் மஹ்ழரி திருக்குர் ஆன் வசனம் ஓதினார். மாநில துணைத் தலைவர் தளபதி ஷஃபீகுர் ரஹ்மான், இந்திய தேசிய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் மணிரத்னம், தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரீஸ், தி.மு.க ஒன்றிய செயலாளர் சோழன்,மானியம் ஆடுர் ஊராட்சி மன்ற தலைவர் மெஹ்ராஜுதீன், மங்களம்பேட்டை வழக்கறிஞர் பாரி இப்ராஹிம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இ.யூ. முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் சகாபுதீன், மாவட்ட துணைத் தலைவர்கள் நூருல்லா, அனீசுர் ரஹ்மான், மெளலவி ஹாரீஸ், தாஜுதீன் ஆயங்குடி முஹம்மது அலி , சிதம்பரம் நகர தலைவர் முஹம்மது ஆலி, மங்கலம் பேட்டை நகர தலைவர் நூர் முஹம்மது , செயலாளர் சர்தார், ஜெ. ஹெச். நகர் மெளலவி இர்பானுல்லா, காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் நஜீர் அஹமது, இளைஞர் காங்கிரஸ் கமலக்கண்ணன், தி.மு.க பிரமுகர் அப்துல் அஹது , காங்கிரஸ் நகர தலைவர் ஹிதாயத்துல்லா ஜின்னா, பஷீர், அய்யூப், முத்தவல்லி அப்துஸ் ஸலாம், சபீர் அஹமது மற்றும் இ.யூ முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலீமுல்லா, சாதுல்லா, முஹிபுல்லா, மைதீன், அஸ்கர்,சவ்ரி ராஜன், சலாவுதீன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட பொருளாளர் முபாரக், நகர இளைஞரணி தலைவர் மஹபூப் அலி, செயலாளர் சிராஜுத்தீன், பொருளாளர் நஜீயுல்லா, ஹஸன், மாணவர் அணி மாநில பொருளாளர் அஹமது, நகர தலைவர் அஸ்கர், செயலாளர் முஸாஹிர் ஆகியோர் பங்கேற்றனர் சிதம்பரம் நகர இ.யூ. முஸ்லிம் லீக் செயலாளர் மௌலானா ஷாஹுல் ஹமீது பாகவி ஹஜ்ரத் துஆ ஓதினார் .லால்பேட்டை கைகாட்டியில் நடைப்பெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு மாவட்ட பொருளாளர் மங்கலம் பேட்டை சகாபுதீன் இ.யூ. முஸ்லிம் லீக் கொடியேற்றினார்.
Tags: லால்பேட்டை