Breaking News

தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படுவதற்கான இடத்தை வக்பு வாரிய உறுப்பினர்கள் பார்வை..!

நிர்வாகி
0

தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைப்பதற்கான வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை (பல்லாவரத்தில்) இன்று வக்பு வாரிய உறுப்பினர்கள் பார்வையிட்னர்.

தமிழக அரசு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னை பல்லாவரத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் ஹஜ் இல்லம் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஹஜ் இல்லம் அமைக்கப்படுவதற்கான இடத்தை இன்று வக்ஃபு வாரிய தலைவர் ஜனாப் முஹம்மது ஜான் எம் பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முகமது அபுபக்கர் எம்எல்ஏ, செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ உள்ளிட்ட வக்ஃபு வாரிய உறுப்பினர்கள், மற்றும் வக்ஃப் வாரிய முதன்மை செயல் அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்தோம்.

இறைவன் நாட்டத்தால், விரைவில் ஹஜ் இல்லம் சிறப்பான முறையில் அமைக்கப்பட அனைவரும் பிரார்த்திப்போம்.

Tags: சமுதாய செய்திகள்

Share this