Breaking News

K .A .அமானுல்லா குற்றசாட்டுக்கு .. லால்பேட்டை முஸ்லீம் பட்டதாரிகள் கல்விச்சங்கம் விளக்கம் !

நிர்வாகி
0

எல்லாம் வல்ல அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்தை ஓதியவர்களாக, இந்த பதிவை சமுதாய மக்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கிறோம்.

மதரஸா மன்பவுல் அன்வாரின் செயலாளர் மதிப்பிற்குரிய ஹாஜி K .A .அமானுல்லா அவர்கள் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகத்தை விமர்சித்து முக நூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதற்கான விளக்கமும் -விடையும்தான் இந்த பதிவு .

கொரோனா காலத்தின் கொடும் பிடியில் சிக்கி ஏறத்தாழ ஏழு மாதங்கள் நமது பள்ளி மூடப்பட்டு இருக்கிறது என்றாலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் -ஊழியர்களுக்கான ஊதியங்கள் நிறுத்தப்படாமல் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளிக்கு நிதி நெருக்கடி அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஆகவே செலவினங்களை குறைக்கும் பொருட்டு பள்ளியின் பகுதிகளில் ஒன்றாக இயங்கி வந்த ஹாஜி அமானுல்லா அவர்களுக்கு சொந்தமான கட்டிடத்தை அவரிடமே ஒப்படைக்க முடிவு செய்து அந்த முடிவை அவரிடமே நேரிலும் கடிதங்கள் மூலமும் தெரிவித்தோம்.

முப்பது ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இருக்க, எப்படி இடையிலேயே நீங்கள் முறிக்க முடிவு செய்தீர்கள் என்று கோபத்துடன் வாதிட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து மதரஸாவில் தலைவர் பொருளாளர் பிரமுகர்கள் அவரின் உறவினர்கள் ஆகியோருடன் பள்ளியின் வளாகத்திற்கே வந்து நஷ்ட ஈடு கோரினார்.

ஒரு கட்டிடத்தில் வாடகைக்கு இருந்த ஒருவரிடம் கட்டிடத்தை காலி செய்ததற்காக உரிமையாளரே நஷ்ட ஈடு கேட்பது விந்தையான ஒன்று. வாடகை கட்டிடங்களில் பள்ளிக்கூடங்கள் இயக்கப்பட்டால், குறைந்தபட்சம் முப்பது ஆண்டுகளுக்கான வாடகை ஒப்பந்தம் செய்யப்பட வேண்டுமென்பது அரசாங்கத்தின் நியதியும் விதியும் ஆகும். அந்த அடிப்படையில் தான் அரசாங்கத்தின் விதிப்படி அந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஹாஜி அமானுல்லா அவர்கள் அந்த ஒப்பந்தபடியே முப்பது ஆண்டு காலம் பள்ளி அங்கேயே இயங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார். அதே ஒப்பந்தத்தில் மாத வாடகை ருபாய் 12,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது .ஒப்பந்தப்படி கால வரையறை முப்பதாண்டுகள் என்பதில் கண்டிப்பாக இருப்பவர், அதே கண்டிப்பு நிர்ணயிக்கப்பட்ட மாத வாடகையிலும் இருக்க வேண்டும் அல்லவா? ஒப்பந்தப்படி மாத வாடகை ரூ 12,000 வாங்காமல் ஏன் 44,500 வாங்குகிறார்? இமாம் கஸ்ஸாலி பள்ளி மூலம் பெற்ற வாடகை வருமானத்தை இழந்ததால் , விரக்தி அடைந்த அவர் பள்ளி நிர்வாகத்தை பழி தீர்க்க RTI ல் புகார் கொடுத்துள்ளார்.

அவரின் கட்டிடத்தை பற்றி அறியத்தான் RTI ல் மனு கொடுத்தேன் என்று கூறுவது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது. அவர் கட்டிய கட்டிடத்தின் விவரம் அவருக்கே தெரியாதா? அப்படியே அவரின் கட்டிடம் பற்றிய தகவலை அறிய செய்ததாகவே இருக்கட்டும் ஏன் பள்ளியின் மற்ற கட்டிடங்களுக்கான தகவலை கேட்டு பள்ளியை காட்டி கொடுக்க முயல்கிறார்?

பள்ளியின் கட்டிடங்களில் மதரசாவிற்கு சொந்தமான கட்டிடங்களும் அடங்கும் என்பதை அவர் அறியாமல் இருந்தாரா? பள்ளிக்கு கேடு செய்ய விரும்பியவர் மதரசாவிற்கும் கேடு விளைவித்துவிட்டார். இது பற்றிய கூடுதல் விவரங்களை இப்படிப்பட்ட பொது தளங்களில் பதிவிட நாங்கள் விரும்பவில்லை.

ஹாஜி அமானுல்லா அவர்களின் பதிவில் முகவரி இல்லாத கடிதத்தை மதரசாவிற்கே அனுப்பியதாக கூறுகிறார். மதரஸாவின் முகவரி இல்லாத கடிதம் மதராசாவிற்கு எப்படி வந்தது? அந்த கடிதத்தை நாங்கள் மதராசாவிற்கு அனுப்பியது எங்களுக்கு நீதி கேட்டு அல்ல. ஹாஜி அமானுல்லா அவர்களின் நடவடிக்கைகளை மதரசா உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே!

ஹாஜி அமானுல்லா போன்ற தனி நபர்களின் அச்சுறுத்தல்களும் எச்சரிக்கைகளும் இமாம் கஸ்ஸாலி நிர்வாகத்தை ஒன்றும் செய்து விட முடியாது. ஏனென்றால் பாரெங்கும் பரவிக்கிடக்கும் பள்ளியின் பல்லாயிரக்கணக்கான பழைய மாணவர்களின் துஆக்களும் புதிய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்களின் துஆக்களும் எங்களுக்கு வலிமை சேர்க்கும் (இன்ஷா அல்லாஹ்) இறுதி நாள்வரை இப்பள்ளி இயங்கும் இன்ஷா அல்லாஹ் ..

இக்கடிதத்தை அருள்மறை குர் ஆனின் ஆணித்தரமான அழகிய வசனமொன்றை கூறுவதன் மூலம் நிறைவு செய்கிறோம். “பிரகடனம் செய்யுங்கள் வாய்மை வென்றுவிட்டது பொய் அழிந்துவிட்டது நிச்சயமாக பொய் அழிந்தே தீரும் ". அல் குர் ஆன் (17:81)

இப்படிக்கு,

முஸ்லீம் பட்டதாரிகள் கல்விச்சங்கம், இலால்பேட்டை .

Tags: லால்பேட்டை

Share this