Breaking News

டிச.6 நீதி பாதுகாப்பு தினம்: தமுமுக அறிவிப்பு!

நிர்வாகி
0

வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் வக்கிரம் கொண்ட சங்பரிவார வன்முறை கும்பலின் உக்கிரமான பயங்கரவாதத்தால் அக்கிரமமான முறையில் வீழ்த்தப்பட்ட டிச.6ம் நாளை நீதி பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது. இறைவன் நாடினால் எதிர்வரும் டிசம்பர் 6.2020 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தனிமனித இடைவளி உள்ளிட்ட விதிமுறைகளைப் பேணி மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை தமுமுக சார்பில் இன்ஷா அல்லாஹ் நடத்துவோம். இக்கருத்தரங்கில் சங்கிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான தோழமை இயக்கங்கள் சார்ந்த சான்றோர் பெருமக்கள் உரையாற்ற உள்ளனர்.பாபரி மஸ்ஜித் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 450 ஆண்டு வரலாறு கொண்ட பள்ளிவாசல் கள்ளத்தனமாக டிச.22.1949ல், உள்ளே சிலைகளை வைத்து அபகரிக்கப்பட்டது.

அன்றைய நீதித்துறை, மாநில அரசு அதற்கு உடந்தையாகின பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்பது பல்வேறு நீதிமன்றங்களில் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டன. ஆயினும் 1992 டிச.6 அன்று பயங்கரவாதிகளால் இடித்துத் தகர்க்கப்பட்டது. இதை உலகையே அதிரவைத்த, கொடுங்குற்றம் என உச்ச நீதிமன்றமும் கூறியது. பாபரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகள் நீதிபதி லிபரான் ஆணையத்தால் அடையாளம் காட்டப்பட்டனர்.

ஆமை முதுகில் சவாரி செய்த பாபரி மஸ்ஜித் வழக்கு சட்டப்படியான நீதி சொல்லப்படாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டது.

பாபரி மஸ்ஜிதை இடித்தக் குற்றவாளிகளும் அவர்களை வழிநடத்தியவர்களும் நாட்டின் உயர்பதவிகளை அடைந்தனர். சட்டத்தையும், நீதித்துறையையும் தங்களது ஆளுகைக்கு உட்பட்டதாக ஆக்கினர்.

அதன் உச்சகட்ட கொடிய விசையமாக பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தை, இடித்தவர்களுக்கே வழங்கிவிட்டுக் பள்ளிவாசலைப் பறிகொடுத்த முஸ்லிம்களுக்கு மாற்று திட்டத்தை வழங்கிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு. பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விடுவித்து வழங்கப்பட்ட தீர்ப்பு நீதியின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களை இந்தப் போக்கு நிலைகுறைய வைத்துள்ளது.

அப்பட்டமான அராஜகம் ஒன்று, நீதித்துறையின் தீர்ப்பால் நியாயப்படுத்தப் பட்டிருப்பது வேதனைக்குரியது வெட்ககரமானது.

எனவே, சமகாலத்தில் இந்த துரோக வரலாற்றை என்றும் மறக்க மாட்டோம் என்பதை பறைச்சாற்றி நினைவூட்டி, நாட்டின் சமயசார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகிய உயர் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், இந்திய அரசியல் சாசணத்தைப் பாதுகாப்பதற்கும் அரசியல் சாசனத்தின் முதன்மைப் பாதுகாவலாகிய உச்சநீதிமன்றத்தின் மனசாட்சியை நோக்கி வினாக்களைத் தொடுப்பதற்கும் நீதி பாதுகாப்பு தினம், டிச.6 ஆக அறிவித்து கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் தமுமுக

Tags: சமுதாய செய்திகள்

Share this