Breaking News

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

நிர்வாகி
0

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை முப்பெரும் விழா நடைபெற்றது.

1, முன்னாள் மாணவர் சங்க ஏற்பாட்டில் நகர முஸ்லிம் ஜமாஅத் செலவில் சீரமைத்து புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்களை பள்ளியின் செயல்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

2, மௌலாலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான தேசிய கல்வி நாள் கொண்டாடப்பட்டது.

3, மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவு சிறிய பூங்கா மரம் நடும் நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர், வட்டாட்சியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் முஸ்லிம் ஜமாஅத் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கொரோ தடுப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் வருகை ஏற்கப்பட்டது. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Tags: லால்பேட்டை

Share this