Breaking News

உறவுகள் வேண்டுமா? சுவனம் கிடைக்கும் ..!

நிர்வாகி
0

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே..!

அல்லாஹ் ஆதம் அலை அவர்களை படைத்து முதல் உறவே துணைவியாக ஹவ்வா அலை அவர்களை படைத்தான் உறவுகளின் ஆலமரமே ஆதம் (அலை) ஹவ்வாவும்தான்

யாரெல்லாம் உறவுகள் தந்தை வழியாக வந்தவர்களும், தாயின் வழியாக வந்தவர்கள் அனைவர்களும் உறவுகள்தான் பல உறவுகளை ஏற்படுத்திய அல்லாஹ் அடுத்த கட்டளையாக உங்களுடைய உறவுகளுடன் சேர்ந்து வாழுங்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறுபவர்களுக்கு நபி( ஸல் ) அவர்களின் மூலமாக எச்சரிக்கையும் செய்யப்பட்டது قال رسول الله صلى الله عليه وسلم (لا يدخل الجنة قاطع رحم)

உறவுகளை முறித்து வாழ்பவன் சுவனத்தில் நுழையமாட்டான் அதே நேரத்தில் அல்லாஹ்வின் கட்டளையை பின் பற்றுபவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் மூலமாக சுபச்செய்தியும் சொல்லப்பட்டது قال النبي ﷺ أيضًا: من أحب أن يبسط له في رزقه وأن ينسأ له في أجله فليصل رحمه

ஹயாத் நீளமாகுவதற்கும், ரிஜ்க் விசாலமாகுவதற்கும் எவர் விரும்புகிறாரோ அவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும் இப்படி உறவுகளை பேனிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வாலும்,ரஸுலுல்லாஹ்வாலும் சொல்லப்பட்டும் நம்மிடம் அலட்சியமும், வரட்டும் கவுரவம் உள்ளத்தில் அழுக்காக பதிந்துள்ளது நவூதுபில்லாஹ் في الحديث القدسي: «قال الله تبارك وتعالى: أنا الله، وأنا الرحمن، خلقت الرحم، وشققت لها من اسمي، فمن وصلها وصلته، ومن قطعها بتته»

அல்லாஹ் இப்படி சொல்கிறான் நான்தான் இறைவன், நான்தான் ரஹ்மான், என்னுடைய (ரஹ்மான்) பெயரிலிருந்தே அதை எடுத்து உறவிற்கு (رحم) என்று பெயர் வைத்தேன் .அப்படியாபட்ட உறவினர்களுடன் யார் சேர்ந்து வாழ்வாரோ அவரை நான் சேர்த்து கொள்வேன் உறவை யார் முறித்து வாழ்வாரோ அவரை நான் துண்டித்து விடுவேன்.

அல்லாஹ் ஏற்படுத்திய உறவை நாம் எவ்வளவு மதிக்கிறோமா, அல்லது அவமதிக்கிறோமா என்பதை மனித சமுதாயம் சிந்திக்க வேண்டும் மனிதன் என்ற அடிப்படையில் சில தவறுகள் உறவினர்களிடத்தில் வெளிப்படும் ஏன் நாம் தவறுக்கும்,பாவத்திற்கும் அப்பார் பட்டவர்களா? இல்லவே இல்லை நிச்சயம் ஆதமுடைய பிள்ளைகள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்பவர்களில் சிறந்தவர் தவ்பா செய்பவர் அல்லாஹ் ரஹ்மானாகவும், ரஹீமாகவும் இருக்கிறான் நம்மை மன்னிப்பவனாகவும் இருக்கிறான் அல்லாஹ் நம்மை மன்னிக்கும் போது உறவுகளாலோ, இஸ்லாமிய சொந்தங்களாலோ அல்லது மாற்று மத சகோதரர்களால் எதாவது நோவினை கொடுத்து விட்டால் மரணிக்கும் வரை அவர்களை மன்னிக்க மாட்டுகிறோம்

சிலர் விதிவிலக்கு உறவுகளில் யாருக்காவது திருமணமோ, அல்லது மரணமோ நிகழ்ந்து விட்டால் ஒன்று சேர்ந்து கொள்வது சிலர் மரணம் நிகழ்ந்தால் கூட உறவினர்களோடு சேருவது கிடையாது

ஒரு முஃமினிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்ககூடாது என்று மார்க்கம் கண்டிக்கிறது ஏன் ஒரு படி தாண்டி அவர் இஸ்லாத்தின் வட்டத்தை விட்டே தாண்டிவிடுவார் என்று எச்சரிக்கையும் செய்கிறது

கப்ரின் வாழ்க்கையின் மீதும், நரகத்தின் வாழ்க்கையின் அச்சமும் இருந்தால் சுவனத்தில் உறவினர்களுடன் சேர்ந்து இருப்பீர்கள் வரட்டு கவுரவமும், பிடிவாதமும் இருந்தால் துன்யா வாழ்க்கையிலேய பல கஷ்டங்களை நாம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் نستغفر بالله ونعوذ بالله

செல்வமும், இயக்கமும்,அரசியலும்,உலக ஆசைகளும் இவைகள்தான் நம் உறவை தீர்மானிக்கிறது

நிச்சயம் மேல் கூறப்பட்ட எதுவும் நம்முடைய கப்ரின் வேதனையோ, அல்லது நரகத்திற்கு போகுவதையோ தடுக்க போகுவது கிடையாது

உன்னதமான உறவை பேனுவோம்

உயர்வான சுவனத்தில் நுழைவோம்

அப்துஸ்ஸமது மன்பயீ

JMA பாசறை 2012

லால்பேட்டை

Tags: இஸ்லாம்

Share this