Breaking News

நூருல் முபாரக் பள்ளிவாசலில் மீலாது நபி விழா..! பட்டமளிப்புவிழா..!

நிர்வாகி
0

லால்பேட்டை நூருல் முபாரக் மஹல்லா பள்ளிவாசலில் ஜமாஅத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்திய மீலாது நபி விழா மற்றும் சதக் ஜலால் நாளிரா பெண்கள் அரபுக்கல்லூரியின் 4-ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா 15-11-2020 ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு மவ்லானா மவ்லவி ஓ.ஆர்.ஹஜ்ஜி முஹம்மது பாஜில் மன்பஈ ஹஜ்ரத் தலைமையில் நடந்தது .நூருல்முபாரக்மஸ்ஜித் முத்தவல்லி ஏ.எம்.பத்தஹூல் மௌசலி முன்னிலை வகித்தார். சதக் ஜலால் நாளிரா பெண்கள் அரபுக் கல்லூரி செயலாளர் ஹாஜி ஏ.எம் ஜெக்கரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

மவ்லவி ஏ.எம்.பக்கீர்முஹம்மது பாஜில் மன்பஈ நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்க மவ்லவி எஸ்.ஏ.பஷீர் அஹமது மன்பஈ துவக்கவுரை ஆற்றினார். புதுக் கோட்டை சிராஜூல்முனீர் அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் அதிரை ஏ.எல்.ஹாரூன் காஷிபி ஹஜ்ரத், மன்பவுல் அன்வார் பேராசிரியர் மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் வி.ஆர்.அப்துஸ் ஸமது ஹஜ்ரத் மற்றும் கும்பகோணம் ஜாமிஆ இலாஹியா முதல்வர் மவ்லானா, மவ்லவி ஹாபிஃழ் எம் .ஜே.ஹஸனுத்தீன் எம்.ஏ.மன்பஈ ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மன்பவுல் அன்வார் முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி,ஹாஃபிழ்,காரி, முஃப்தி, அல்ஹாஜ் ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கி வாழ்த்துரை வழங்கி துவா செய்தார். மவ்லவி ஏ.எம். ஹஸன் முஹம்மது மன்பஈ நன்றி கூறினார் . மஹல்லா நிர்வாகிகள்,ஜமாஅத்தார்கள் உலமா பெருமக்கள்,பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this