Breaking News

காயிதேமில்லத் கண்டெடுத்த தளபதி சிறப்பு மலர் வெளியீட்டு விழா..!

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் மன்பஈ அவர்களின் மணிவிழா மற்றும் பொது வாழ்வில் மணிவிழா காணும் "காயிதேமில்லத் கண்டெடுத்த தளபதி "சிறப்பு மலர் வெளியீட்டுவிழா முஸ்லிம் லீக் மாவட்டதலைவர் முஹம்மது ஜகரிய்யா தலைமையில் இன்று 07-11-2020 ஞாயிறு பகல் 11 மணி அளவில் லால்பேட்டை நூர்மஹல் நடைபெற்றது.

சிறப்பு மலரை தி.மு.கழக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. வெளியீட்டார்,

இ.யூ. முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில பெருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி MP. காங்கிரஸ் தேசிய பிரதிநிதி மணிரத்ணம் ஆகியோர் சிறப்பு மலரை பெற்றுக் கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this