இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களுடன் லால்பேட்டை நிர்வாகிகள் சந்திப்பு!
திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, கடலூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான், லால்பேட்டை நகர தலைவர் எஸ். எம். அப்துல் வாஜிது, நகர செயலாளர் எம். ஹெச். முஹம்மது ஆசிப், நகர துணை செயலாளர் அமானுல்லா, எம். எஸ்.எஃப் மாநில பொருளாளர் ஏ. எஸ். அஹமது ஆகியோர் 9/11/2020 திங்கள் கிழமை மாலை சந்தித்து தலைவர் அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், மணிச்சுடர் செய்தியாளர் ஷாகுல் ஹமீது, கே.எம்.கே.பைஜுர் ரஹ்மான், முஹம்மது இஸ்மாயில், ஜியாவுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags: லால்பேட்டை