குழந்தைகள் நலம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நான்காம் நிகழ்வு
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் நடத்தப்படட்டு வரும் குழந்தைகள் நலம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நான்காம் நிகழ்வு இன்று 23-12-2020 புதன்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு லால்பேட்டை முபாரக் ஜும்மா மஸ்ஜிதில் பள்ளியின் முத்தவல்லி அல்ஹாஜ் A.H அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர், JMA துணை முதல்வர் மவ்லானா மவ்லவி
S.A. சைபுல்லாஹ் மன்பயீ, ஹள்ரத், அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்
பள்ளியின் இமாம்கள் மவ்லவி முஹம்மது பாரூக் மன்பயீ அவர்கள் கிராஅத் ஓதினார்கள் மவ்லவி, நிஜாமுதீன் ரஹீமி அவர்கள் து ஆ ஓதினார்கள். இக்கூட்டத்தில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மவ்லவி A.R.ஸலாஹுத்தீன் மன்பயீ, துணை செயலாளர் மவ்லவி A. மாசுமுல்லாஹ் மன்பயீ, பொருளாளர் மவ்லவி S.A. ஜமால் அஹமது மன்பயீ , மவ்லானா, மவ்லவி தளபதி A. ஷஃபிகுர்ரஹ்மான் ஹள்ரத், லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள், மக்தப் மாணவர்கள் , மற்றும் பெரும் திரளாக பெண்கள் கலந்துக் கொண்டனர்
Tags: லால்பேட்டை