லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்தில் நடைபெற்ற 72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா
ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று 26-1-2021 செவ்வாய் கிழமை ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு நமது லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இந்திய திருநாட்டின் 72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அல்ஹாஜ் V.A. அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் துணை முதல்வர் மவ்லானா மவ்லவி S.A சைபுல்லாஹ் மன்பயீ ஹள்ரத், அவர்கள் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் நிர்வாக குழு செயலாளர் அல்ஹாஜ் K.A. அமானுல்லாஹ் அவர்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் ஷைகுல் ஜாமிஆ, கடலூர் மாவட்ட அரசு காஜி, மவ்லானா மவ்லவி ஹாபிழ் A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தேசியத் கொடி ஏற்றினார்கள்
ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர் மவ்லவி ஹாபிழ் A.மாசுமுல்லாஹ் மன்பயீ ஹள்ரத் குடியரசு தின சிறப்புரை ஆற்றினார்கள்
ஜாமிஆ மஸ்ஜித் மக்தப் மாணவர் அப்பாஸ் அஃப்ரித் திருகுர்ஆன் வசனங்கள் ஓதினார்
மதரஸா மாணவர்கள், ஜமாத்தார்கள் சிறுவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை