வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது : வாட்ஸ் அப் விளக்கம்
வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என புதிய விதிமுறைகள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கடந்த மாதம் வாட்ஸப் திடிரென புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்தது
இதையடுத்து தங்களது தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப் சேமிக்கிறது என்ற அச்சத்திலும் புதிய விதிமுறைகளாலும் பலர் மாற்று செயலியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளது. அதில்
வாட்ஸ்ஆப்பில் பயனாளிகளின் அழைப்புகள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படாது.
உங்களுடைய இருப்பிடம் குறித்த தகவல்கள், உங்கள் தொடர்புகள் உள்ளிட்டவை பேஸ்புக்குடன் பகிரப்படாது.
வாட்ஸ்ஆப் குழுக்கள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.
Tags: செய்திகள்