லால்பேட்டையில் நடைபெற்ற கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம்
கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று 17.01.2021 ஞாயிற்றுக்கிழமை லால்பேட்டை காங்கிருப்பு APM திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் NVS செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.முன்னாள் மாவட்ட தலைவர் இராதா கிருஷ்ணன், மாநிலபொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன், மணிமொழி,சத்தியமூர்த்நி மாநிலபொதுச்செயலாளர் சேரன்,மாநிலசெயலாளர் PPK சித்தார்த்தன்,அமீரக காங்கிரஸ் கட்சி தலைவர் அப்துல்மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மாவட்டதுணைத் தலைவர் நஜீர்அஹமது வரவேற்புரை நிதழ்த்தினார்.
மாநில துணைத்தலைவர டாக்டர் K.I மணிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.கட்சி வளர்ச்சிப்பணி, புதிய மாநில மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம்,தேர்தல் பணிகள் குறித்து தொண்டர்கள் கருத்து கூறினர்.
தொண்டர்களை ஒருங்கிணைத்து அரவனைத்து கட்சியினை எழுச்சியுடன் முன்னேடுத்துச்செல்லும் அழகிரி தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குமராட்சி வட்டார தலைவர் திருவரச மூர்த்தி,என்.ஆர்.எஸ். பாண்டியன்,முஹம்மது பஷீர்,ஜின்னா சலாம் ,சங்கர்,அண்ணாதுரை சங்கர்,அன்வர்,கமல்மணிரத்தினம் தியாகராஜன்,அந்தோணி,எள்ளேரி பன்னீர் பாளயங்கோட்டை வைத்தியநாத சாமி,வெங்கடகிரி,சாம்பமூர்த்தி,அன்பு ஜோதிபாசு,அரிகிருஷ்ணன் மோகன்தாஸ் உள்ளிட்டபலர் கலந்துகொண்டு பேசினர். குமராட்சி வட்டார தலைவர் பாபுராஜன் நன்றி கூறினார்
Tags: லால்பேட்டை