லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக,மமக கடலூர் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு
கடலூர் தெற்கு தமுமுக,மமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று 02.01.2021 மாலை லால்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமத் அவர்கள் தலைமையில் மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயினுலாபுதீன் மாநில உலமா அணி செயலாளர் மெளலவி M.Y.முஹம்மது அன்சாரி இவர்களின் முன்னிலையிலும் நடைபெற்ற பொதுக்குழுவில் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர் முஹம்மது ஹாரிஸ் லால்பேட்டை , தமுமுக மாவட்ட செயலாளர் S.M.J.அஸ்லம் பின்னத்தூர் , மமக மாவட்ட செயலாளர் A.V.அப்துல்நாசர் ஆயங்குடி , மாவட்ட பொருளாளர் நஜிர் அஹமத் மானியம் ஆடூர் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
Tags: லால்பேட்டை