லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் முதல் மருத்துவ முகாம்
லால்பேட்டை சுகாதார மையம் (LALPET HEALTHCARE CENTRE) வளாகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று 01-02-2021 காலை 08.00 முதல் மாலை 07.00 வரை, நடைபெற்றது,
இதில் இருதயம் மற்றும் இரத்த அழுத்த சிறப்பு மருத்துவர், சர்க்கரை மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், எலும்பு முரிவு, எலும்பு அடர்த்தி கண்டறியும் சிறப்பு ஸ்கேன், எலும்பு வலிமை கண்டரிதல், மகளிர் சிறப்பு மருத்துவர் மற்றும் பொது மருத்துவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டார்கள்.
லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து *600 க்கும் அதிகமான பயனாளிகள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். அனைவருக்கும் கட்டணம் இல்லா மருத்துவ பரிசோதனையும், கட்டணம் இல்லா மருந்துகளும் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சிறப்பு மருத்துவர்கள், லால்பேட்டை சுகாதார மையம் (LHC) மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், நர்சிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்த ஏற்பாட்டை சிறப்பாக முன்னின்று நடத்திய லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவ அறக்கட்டளையின் நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் .
Tags: லால்பேட்டை