ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..!
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்: இந்தியாவிலிருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் அனைத்து பயணிகளும், 72 மணி நேரத்திற்குள் covid-19 பரிசோதனை செய்து கொண்ட எதிர்மறை சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவில் எப்பொழுதும் போல் சுற்றுலா விசா மற்றும் திரும்பி வருவதற்கான விமான டிக்கெட், covid-19 பரிசோதனை செய்த 72 மணி நேர எதிர்மறை சான்றிதழ் வழங்கியதுடன் சுற்றுலா பயணிகளிடம் வழக்கமான அதிகமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் வழக்கம்போல பரிசோதனை முடிந்த பிறகு ஒரு பிசிஆர் பரிசோதனை செய்யப்படுவார்கள், பரிசோதனை செய்து முடிந்தவுடன் அவரவர்கள் இடத்திற்கு திரும்பலாம். பிசிஆர் பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் யாரும் வெளியில் போகக்கூடாது. பிசிஆர் பரிசோதனை 24 மணி நேரத்துக்குள் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். முடிவு வந்தவுடன் வழக்கமான உங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.
துபாயில் இருந்து சுற்றுலா பயணிகள் அபுதாபிக்கு செல்ல முடியுமா?
துபாய் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் உடனடியாக அபுதாபிக்கு செல்ல முடியாது. அதற்கு பதிலாக 10 நாட்களுக்கு துபாயில் வசித்த பிறகு ஒரு covid-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். covid-19 எதிர்மறை முடிவு வந்தவுடன் அதற்குப்பிறகு நீங்கள் அபுதாபிக்கு பயணம் மேற்கொள்ளலாம். அபுதாபி விசா உள்ளவர்கள் துபாய் மூலம் பயணம் மேற்கொண்டால் உங்களை பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். "சுற்றுலா பயணிகள் யாரும் உடனடியாக அபுதாபிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்".
Tags: உலக செய்திகள்