லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 77வது பட்டமளிப்பு விழா
நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 158ம் ஆண்டு விழா 77வது பட்டமளிப்பு விழா இன்று 24.03.2021 காலை 9.00 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
ஜாமிஆ தலைவர் ஹாஜி J.அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் K.A.அமானுல்லாஹ் வரவேற்றார்.
பட்டமளிப்பு பேருரை ஷைகுல் ஹதீஸ் மவுலவி A.E.M.அப்துல் ரஹ்மான் ஹழ்ரத் , சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத்,நீடூர் மிஸ் பாஹில் ஹூதா அரபுக் கல்லூரி து முதல்வர் மவுலவி K.A. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஹழ்ரத் , தேவிபட்டினம் ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் மவுலவி S. முஹம்மது யாஸீன் ஹழ்ரத் , சிந்தாமணிபட்டி மதராசத்துல் ஸஊதிய முதல்வர் மவுலவி சிராஜுதீன் ரஷாதி , ரியாளுள் ஹூதா மவுலவி முஹம்மது அலி மன்பஈ , ஆயங்குடி மவுலவி ஜாபர் அலி ஹள்ரத், மற்றும் ஜாமிஆவின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், ஹாஃபிழ் ஆகியோருக்கு ஜாமிஆ முதல்வர் மவுலவி A.நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். ஜாமிஆ பொருளாளர் ஹாஜி S.A.அப்துல் அஹது நன்றி கூரினார்.
Tags: லால்பேட்டை