ஷஃபீகுர்ரஹ்மான் இயற்கை எய்தினார்! மர்ஹபா சமூக நலப் பேரவை இரங்கல்...!
சரித்திர புகழுக்கும், சான்றுக்கும் உரித்தான லால்பேட்டை மாநகரில் “தளபதி” என மணிமகுடம் (புகழாரம்) சூட்டப்பட் அரசியல் ஆளுமை மெளலானா மெளலவி ஷஃபீகுர்ரஹ்மான் இயற்கை எய்தினார்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கீன் மாநில துணைத் தளபதி அல்ஹாஜ் மெளலான மெளலவி ஷஃபிக்குர்ரஹ்மான் அவர்களின் 10.03.2021 மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானோம்.
எளிமையின் மணிமகுடமாய்,
எல்லோருடனும் அன்பாய் !
கொள்கையில் உறுதியாய் !
ஆன்மீக பற்றோடு..! வளம் வந்த தளபதி அவர்கள் நம்மோடு இல்லை என்ற செய்தி மனதை உருக்குகிறது.
கடந்த நவம்பர் 2020 ஆண்டு பொது வாழ்வில் வெள்ளி விழா கண்ட தளபதி என ஓர் விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்து ...! நினைவு மறைவதற்குள் அவர் நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மார்க்க அறிஞராக,
சமுதாய தலைவர்களில் ஒருவராக ,
எழுத்தாளராக,
அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசியல் தலைவர்களோடு நட்பு பாராட்டி சிறந்த அரசியல்வாதியாக எல்லோராலும் பாராட்டப்பட்டு வாழ்ந்து நம்மை விட்டு மறைந்திருக்கூடிய தளபதி அவர்களின் இழப்பு - நமது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
அன்னாரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து சுவர்கத்த்தில் உயர்வான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழையச் செய்வானாக ..ஆமீன்
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள், அவர் உயிர் மூச்சாய் நேசித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், அதன் தலைவர்கள், நிர்வாகிகளுக்கும் மேலும் அவர் மீது பற்றும் அன்பும் கொண்ட நமக்கும், நல் உள்ளங்களுக்கும் இறைவன் அழகிய (சபுர்) பொறுமையை தந்தருள்வனாக...ஆமீன்! யாரப்புல் ஆலமீன்!..
இங்ஙனம்
மர்ஹபா சமூக நலப் பேரவை
Tags: செய்திகள்