ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி நிர்வாகிகளுடன் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ. எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி சந்திப்பு !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் மர்ஹும் மவ்லானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ மகனார் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லால்பேட்டை மண்ணின் மைந்தர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தமது தந்தை முன்னரே ஆலோசனை தெரிவித்திருந்ததின் அடிப்படையில்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி நிர்வாக சபை தலைவர் ஹாஜி ஜெ.அப்துல் ஹமீது, செயலாளர் ஹாஜி கே.ஏ.அமானுல்லா, பொருளாளர் எஸ்.ஏ.அப்துல் அஹது ஆகியோரை
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து துஆ செய்ய கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின் போது லால்பேட்டை நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது, பொருளாளர் தைய்யூப் முஹிப்பி, மாவட்ட துணை தலைவர் அனிசுர் ரஹ்மான், நகர துணை தலைவர் அமானுல்லா, திமுக நகர செயலாளர் ஹாஜா முஹையத்தீன், சிதம்பரம் பிரமுகர் மவ்லானா கணியூர் இஸ்மாயில் நாஜி,முன்னாள் மாவட்ட து.செயலாளர் உபைதுர் ரஹ்மான், நகர து.செயலாளர் அபூஸுஹுது, மாவட்ட யூத் லீக் பொருளாளர் முபாரக், எம்.எஸ்.எஃப் மாநில பொருளாளர் அஹமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags: லால்பேட்டை