சிதம்பரம் தொகுதி வேட்பாளர் அப்துர் ரஹ்மானை ஆதரித்து..!! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசிது பிரச்சாரம்..!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிதம்பரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் A.S. அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு, ஏணி சின்னத்தில் வாக்களிக்குமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசிது அவர்கள் பரங்கிப்பேட்டை ஒன்றியங்களில் வடக்கு பிச்சாவரம், TS பேட்டை, உள்ளிட்ட கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணிவாக்கம் யூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், இக்பால், கியாசுதீன், மாவட்ட MJVS செயலாளர் முஹம்மது ஹம்ஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் நைனா முகம்மது, மாவட்ட MJTS செயலாளர் பாஷா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், மாவட்ட துணை செயலாளர் பைசல், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், நகர, கிளை நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
Tags: செய்திகள்