Breaking News

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி ...

நிர்வாகி
0

வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு ஆலிம்கள் நிறைந்திருப்பது லால்பேட்டையின் அடையாளங்களில் ஒன்று. அப்படிப்பட்ட அடையாளங்களில் ஒருவர்தான் நேற்று மறைந்த தளபதி ஷஃபிக்குரஹ்மான். முஸ்லிம் லீக்கின் முக்கிய பிரமுகர். தமிழகத்தில் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர். இவர்களின் அர்ப்பணிக்கும் தன்மைக்கும், பேச்சுகளுக்கும், எழுத்துகளுக்கும் முகவுரை அவசியமற்றதென்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிடும், லால்பேட்டையின் மண்ணின் மைந்தர், தளபதி ஷஃபிக்குரஹ்மான் அவர்களின் மூத்த மகன் மௌலவி அப்துல் ரஹ்மான் கோட்டக்குப்பம் ரப்பானியாவில் மார்க்க கல்விப் பயின்றவர்.

முஸ்லிம் லீக்கில் தேசிய அளவில் பொறுப்பு வகிக்க கூடியவர். அமீரக காயிதேமில்லத் பேரவை, மற்றும் அய்மான் சங்கங்களிலும் தொண்டாற்றியவரென்று‌ இவரின்‌ சேவைகளின் பட்டியல்கள் நீளுகின்றன.

பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஈகைத் தன்மை கொண்டவர் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி. கட்சியில் தேசிய அளவில் பொறுப்புகள் வகித்த‌ போதும் தலைக்கனமில்லாமல் அனைவருடனும் ஒன்றி பழகுபவர். பல சிரமங்களுக்கு மத்தியிலும் மக்கள் பணியாற்றும் குணம் கொண்டவர் என்பதே அப்துல் ரஹ்மான் ரப்பானியின் அடையாளம்.

சகோதரர் அப்துல் ரஹ்மான் ரப்பானிவுடன் 4 வருடம் மிக நெருங்கிப் பழகியவன். தன் தூக்கத்தை விட மக்கள் பணியே சிறந்ததென்று மக்கள் பணியாற்றக் கூடிய நான் வியந்த பண்பான மனிதர்களில் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானியும் ஒருவர்.

"இப்படி ஓய்வில்லாமல் இருக்கின்றீர்கள்? ஓய்வெடுக்கக் கூறினால், அல்லாஹ் இருக்கின்றான். அவன் எனக்கு உடல் சக்தியைக் கொடுப்பான்" என்று சிரித்த முகத்துடன் கூறி அமீரகத்திலும், இந்தியாவிலும் மக்கள் தொண்டு செய்தவர்‌. தன் உடல் நலம் பாராமல் மக்கள் தொண்டாற்றும் துடிப்பு மிக்க இளம் ஆலிம். எந்தவொரு தயக்கமும் இல்லாமல் இவரை சட்டமன்றத்திற்கு நம்பிக்கையுடன் அனுப்பலாம் என்பதற்கு பல வேறுபட்ட நிகழ்வுகள் சாட்சிகளாக இருக்கிறன.

நான் வியந்த இரு நிகழ்வுகள்:

மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானியின் ஈகைத் தன்மையை நன்கு அறிவேன். அவரின் மக்கள் தொண்டிற்கு முக்கியமான இரு உதாரணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி, ஒரு முறை சமைத்துக் கொண்டிருந்த சமயம். சமைக்கும் குக்கர் ஏதோ காரணத்தினால் வெடித்துச் சிதறியது.

அந்நேரத்தில் குக்கரில் உள்ள காய்கறிகள், சுடு தண்ணீருடன் அப்துல் ரஹ்மான் ரப்பானியின் கைகளைப் பதம் பார்த்தன. சுடு தண்ணீர் பட்ட கைகளுக்கு நண்பர்கள் பற்பசையைத் தடவிக் கொண்டிருந்தார்கள்.

அந்நேரத்தில், அபுதாபியில் இயங்கும் அய்மான் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் ஒருவர் தொலைப் பேசியில் அழைக்கின்றார். கைகளில் சுடுத் தண்ணீர் பட்டதால் எடுத்துப்‌ பேச இயலாமல், ஸ்பிக்கரில் பேசினார் அப்துல் ரஹ்மான் ரப்பானி.

"ஒருவர் உதவிக் கேட்டு வந்துள்ளார். எப்படி உதவி செய்வது "? என்று அவர் கேட்கின்றார். தன் வலியை மறந்து விட்டு. இன்னடிப்படையில் உதவி செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைக் குறிப்பிட்டு அங்குச் செல்லச் சொல்லுங்கள் என்று ஆலோசனை வழங்கிய நிகழ்வு மக்கள் பணியாற்றும் அனைத்து தகுதிகளும் தன்னகத்தே பெற்றுள்ளார் என்பதை காட்டுகிறது.

இரண்டாம் நிகழ்வு:

உலகை மொத்தமாக தன் கோரப் பிடிக்குள் கொண்டு வந்து கோரத் தாண்டவமாடிய கொரோனாவால் வெளிநாடுகளில் வசித்த பல ஆயிரம் மக்கள் வேலையின்றி, உணவின்றி தாய்நாடு செல்ல முடியாமல் பரிதவித்துப் போனார்கள்..

செய்வதறியாமல் பரிதவித்த மக்களுக்கு யாருமே உதவி செய்ய முன்வராத நிலையில், முஸ்லீம் லீக்கின் சார்பு அமைப்பான அமீரக காயித மில்லத் பேரவை சார்பில் மூன்று விமானங்களும், அய்மான் சங்கம் சார்பில் 2 விமானங்களும் அமீரகத்திலிருந்து இயக்கப்பட்டன. அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அமீரக காயித மில்லத் பேரவையின் பொருளாளராகவும் பொறுப்புகள் வகித்தச் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் மெளலவி அப்துல் ரஹ்மான் ரம்பானி எடுத்த முயற்சிகளை சில வரிகளில் கூறி நகர்ந்து விட முடியாது. ஊண்,உறக்கம் இல்லாமல் ஜாதி, மதம் பாராமல் உதவி கேட்ட அத்தனை நபர்களுக்கும் உதவி செய்து தாய்நாட்டிற்கு அனுப்பிவைத்தார். அமீரத்தில் பொது முடக்கம் அமலில் இருந்த நேரத்தில், உணவில்லாமல் தவித்தத் தமிழ் மக்களுக்குப் பெரு முயற்சிகள் மேற்கொண்டு உதவி செய்ததைப் பார்த்து வியப்பாய் இருந்தது.

அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று பிரித்து பாராமல், தன் உடல் நலனையும் பாராமல், பல முயற்சிகளுக்கு மத்தியில் பலதரப்பட்ட மக்களைத் தாயகம் அனுப்பி வைத்த பெருமை அப்துல் ரஹ்மான் ரப்பானியை சாரும்.

முகம் காணாத மக்களுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்ட மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி, தனக்காக ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்யும் மக்களுக்குக் கால, நேரமின்றி மக்கள் சேவை செய்வார் என்பது உண்மை.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் லால்பேட்டை மண்ணின் மைந்தர் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானியை வெற்றி பெற செய்யுங்கள்.

யாசிர் ஹசனி, லால்பேட்டை.

Tags: லால்பேட்டை

Share this